கடந்த சில நாட்களாகவே அதிருப்தியில் உள்ள அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசவிருக்கிறார். மனம் திறந்து பேசப்போவதாக சொன்ன செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் சசிகலா, டிடிவி தினகரன், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இணையவேண்டிய கட்டாயம் பற்றியும் பேசவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

Continues below advertisement

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலக்கட்டத்தில் இருந்தே மிக முக்கிய அதிமுக நிர்வாகியாக இருப்பவர் செங்கோட்டையன், ஜெயலலிதா சுற்றுப்பயணம் சென்றால் அதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுக்கும் நபராக செங்கோட்டையனே இருந்திருக்கிறார். அப்படி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை, எடப்பாடி பழனிசாமி உரிய மதிப்பும், பொறுப்பும் கொடுக்கவில்லையென்றும், ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் வளர்வதற்கே செங்கோட்டையன் தான் காரணம் என்கிறார் அவரது ஆதரவாளர்கள்