தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி, எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Continues below advertisement

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், 47 இடங்களை வைத்துள்ள அதிமுக-வை மீண்டும் இரண்டாக உடைத்து, அதன் எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக தரப்பில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த "குதிரை பேர" அச்சத்தால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, பரம எதிரிகளான திமுக-வும் அதிமுக-வும் கைகோர்க்கப் போவதாக ஒரு புதிய தகவல் கிளம்பியுள்ளது. திமுக-வின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும், இதற்காகவே எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் வரை பொறுமை காக்குமாறு எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

இந்த இக்கட்டானச் சூழலில், சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ச். ஒருபுறம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் (விசிக) தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுப்பக்கம் திருமாவை பொதுவேட்பாளராக திமுக மற்றும் அதிமுக அவரை முதல்வராக அறிவிக்கலம் என்கிற பேச்சு அடிப்படும் நிலையில் அதிமுகவின் இந்த அவசரக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இந்த அவசரக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.