ADMK BREAKING NEWS LIVE: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ. பன்னீர் செல்வம் சென்னை திரும்பியிருக்கிறார்.
AIADMK General Council Meeting LIVE Updates: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ. பன்னீர் செல்வம் சென்னை திரும்பியிருக்கிறார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வேட்பு மனு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி விரைகிறது ஓ.பி.எஸ் அணி. இன்று இரவு ஓபிஎஸ் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறல் - வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வத்துடன், அண்ணாமலை, சி.டி ரவி சந்திப்பு..
எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக தலைவர் அண்ணாமலை, சி.டி ரவி சந்திப்பு
அதிமுக வரலாற்றிலேயே முதன்முறையாக சிறிது நேரத்திலேயே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டமாக இன்றைய அதிமுக கூட்டம் மாறியிருக்கிறது.
பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
பொதுக்குழுவை புறக்கணித்த ஓபிஎஸின் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்கள் வீசினார்.
அதிமுக பொதுக் குழுவில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பன்னீர்செல்வத்தின் மீது காகிதங்கள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என கே.பி.முனுசாமி பேசினார்
பொதுக்குழு அறிவிப்பு தேதி செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசினார்.
பொதுக்குழுவில் ஈபிஎஸூக்கு வீரவாள், கீரிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ் சை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம். தொடர்ந்து பேசிய வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டார்
அதிமுக அவைத்தலைவராக தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.
நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஜெயலலிதா இல்லத்தில் உதவியாக இருந்த ராஜம்மாள், தரங்கை கண்ணன், வாரிய தலைவர் அமிர்த கணேசன், தலைமை கழக ஊழியர் சாரால், திருச்சி- முன்னாள் மேயர் ஜெயா உள்ளிட்ட தொண்டர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள். அனைத்தையும் நிராகரித்த அவர்களின் ஒற்றை கோரிக்கை ஒற்றைத்தலைமை. ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது அந்த தீர்மானங்களோடு இணைக்கப்படுகிறதோ, அப்போது மற்றொரு தலைமை பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
- அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி
அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது - பொதுக்குழு கூட்டத்தில் சிவி சண்முகம் ஆவேசம்..!
ஈபிஎஸ், ஓபிஎஸ் நடுவில் உள்ள சேரில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்த ஈபிஎஸ் மேடையேறி உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை ‘அண்ணன் எடப்பாடியார் வாழ்க’ என முழக்கமிட்டு தொண்டர்கள் வரவேற்றனர்.
முதலில் ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து விவாதம் நடத்த தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் - வைரலாகும் புகைப்படங்கள்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் 5 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவு விபரக்குறிப்பு
சாதம், உருளைக்கிழங்கு பொரியல், கோஸ் கேரட் பொரியல், அவியல், அப்பளம்,
ஊறுகாய், வத்தக்குழம்பு, ஜாக்கிரி, சாம்பார்,
தயிர் சாதம், வத்தக்குழம்பு, ரசம், மோர் மிளகாய்,
பாதாம் கிர், வெஜ் பிலவு, பருப்பு வடை
ஓ. பன்னீர் செல்வம் வந்த பிரச்சார வாகனத்தை அரங்கில் உள்ளே நிறுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வண்டியை தட்டி வெளியே கொண்டு போ என்று ஓட்டுநரை மிரட்டினார்கள். இதனையடுத்து ஓட்டுநர் பயந்து போய் வண்டியை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே வண்டியை எடுத்து சென்றார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் இரு பிரிவாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு வைகைச்செல்வன் வலியுறுத்தி வருகிறார்.
தொண்டர்களின் தொடர் கோஷங்களால் கூட்டத்தில் சலசலப்பு நிலவி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அமைச்சர்கள் திணறி வருகின்றனர்.
மண்டபத்தில் நுழைந்த ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி ஆகியோர் புறக்கணித்தனர்
கூட்டத்தில் 3 வித கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
1. ஒற்றைத்தலைமை வேண்டும் என ஒரு சாரார் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
2. மற்றொரு சாரார் இரட்டைத்தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பி வருகின்றனர்.
3. இன்னொரு சாரார் மோதல் போக்கு வேண்டாம் என கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஓபிஎஸை வெளியே போகச் சொல்லி கூட்டத்தில் முழக்கம் எழுப்பபட்டு வருகிறது.
ஒற்றைத்தலைமை என பொதுக்குழு அரங்கிற்குள் தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தின் நிறைவில் கையெழுத்திட முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு கட்சி நிர்வாகிகளே நுழைய முடியாத அளவிற்கு நெரிசல் நிலவுகிறது.
மண்டபத்தில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் மோதல் கூடாது என உரக்க கருத்து தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்போம் என பன்னீர்செல்வம் தரப்பு உறுதி அளித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை பற்றி விவாதம் நடத்துவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் - செல்லூர் ராஜூ
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி தலைவர்களின் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் பூவிருந்தவல்லி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு புறப்பட்டார் ஈபிஎஸ்.. தொண்டர்கள் கருப்பு, வெள்ளை நிற பலூன்களை ஏந்தி வரவேற்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம், ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு புறப்பட்ட ஈபிஎஸ்-ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பலர் போலி பாஸூடன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர், வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை எனத் தகவல்
பசுவமைவழிச்சாலையின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் குவிந்து கொடிகளை ஏந்தியபடி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழலில் இன்று சென்னை வானகரத்தில் கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம். இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
சென்னையில் ஓபிஎஸ்சின் இல்லத்தை இபிஎஸ் கடந்து சென்றபோது ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓபிஎஸ்சுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் கிளம்பியுள்ளார் பன்னீர்செல்வம்
அதிமுக பொதுக்குழு இன்று கூட உள்ள நிலையில், வானகரம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம்தான் தீர்ப்பாக வந்துள்ளது என பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பொதுக்குழு நடத்தலாம் ஆனால் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Background
AIADMK General Council Meeting LIVE Updates:
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகார பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் கூடுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
3 மணி நேர காரசார விவாதம்
ஓபிஎஸ் தரப்பு வாதம்
இந்த விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு “பொதுக்குழு நடத்தலாம். ஆனால் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது.” என்று வாதிட்டது.
23 தீர்மானங்களுக்கு ஒப்புதல்
மேலும், “ கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அந்தப்பதவிக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது.
23 வரைவு தீர்மானங்களின் நகல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் எனவும் ஓ.பி.எஸ். சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
எடப்பாடி தரப்பு வாதம்:
2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று ஈ.பி.எஸ். தரப்பு வாதிட்டது.
எடப்பாடி தரப்பு வாதத்தில், “ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொது குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.
நாளைய பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம்.பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. ஆகையால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ், “ எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது” என்று வாதிடப்பட்டது.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடந்த இந்த விசாரணையில்,இறுதியாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -