AIADMK LIVE: பொருளாளர் மாற்றம் குறித்து வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம்
AIADMK General Body Meeting LIVE Updates: அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது ட்வீட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா என பதிவு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு
தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல்
அதிமுக வரவு- செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 95,138 கனஅடியாக உயர்ந்துள்ளது.
பொருளாளர் மாற்றம் குறித்து வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். வரவு செலவு கணக்குகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் கவனிப்பார் எனக் குறிபிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
கட்சியில் எடப்பாடிக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர் ! ஜூலை 11 பொதுக்குழுவுக்கு முன் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு முடிவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களது மற்றொரு கூற்றுப்படி, பன்னீர் செல்வம் அந்தக் கட்சியின் பொருளாளர்! எந்த விதத்தில் பார்த்தாலும் பழனிச்சாமி, அந்தக் கட்சியில் ஏற்றுள்ள பதவியைவிட பெரிய பதவி பன்னீருடையது! அவருக்கு அந்த அலுவலகத்திற்குள் வர எல்லா உரிமையும் உள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது
எடப்பாடி பார்வையில் ஓ.பன்னீர் செல்வம் சமூக விரோதியாகத் தெரியலாம்; ஆனால் காவல் துறைப் பார்வையில், அவர் ஒரு முன்னாள் துணை முதல்வர் மட்டுமல்ல; எடப்பாடி போல முதலமைச்சராக சில காலம் இருந்தவர். அதுமட்டுமல்ல; அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அவர் வந்த காலக்கட்டத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்!
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வையும் கலைஞரையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிச்சாமி கூட்டம், ஓ.பி.எஸ், மகள் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை? எனக் கேள்வி.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்துள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என மனுதாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு முடிவுகளை இபிஎஸ் தாக்கல் செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் மனு தாக்கல செய்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, அதிமுக இரு தரப்பு தலைவர்கள், கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் வருகின்ற 25ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையேயான மோதலால் பொது அமைதி பாதிக்கப்பட்டது என காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. மோதலால் 2 காவலர்கள் உட்பட் 47 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது
கல்வீச்சு தாக்குதலை ஓபிஎஸ் தடுக்கவில்லை; அந்த கல்வீச்சில் நிர்வாகிகள் பலருக்கு எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. திமுக அரசும், திமுக அரசுக்கு துணைபோன ஓபிஎஸ்-சும் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் - ஈபிஎஸ்
98 சதவீத அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம் தான் உள்ளனர். ஆவணங்களை அள்ளிச் செல்ல, அதிமுக என்ன உங்கள் சொத்த ? - ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் கேள்வி
ஓபிஎஸ் துரோகி ; சுயநலவாதி. அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஓபிஎஸ் எடுத்துச் சென்றுள்ளார். காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம் - ஈபிஎஸ்
மனசாட்சி இல்லாத மிருகத்தனமானவர்களுக்குதான் இந்த எண்ணம் வரும். ரவுடிகளை ஓபிஎஸ் அழைத்து வந்து கட்சியினரை தாக்கியது வேதனை அளிக்கிறது - ஈபிஎஸ்
சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக்கூடும் என்பதால் பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில மனு அளித்தோம்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொண்டர்களை சந்தித்து, அறுதல் கூறிய பின் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் சட்டப்படி மீட்கப்படும். அலுவலகத்திற்கு சீல் வைத்து அதிமுகவை அழிக்க முடியாது - ஜெயக்குமார்
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார் ஈபிஎஸ்
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை.
அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லம் திரும்பினார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற ஈபிஎஸ், தொண்டர்களின் வாழ்த்துமழையில் வீட்டிற்கு பயணம்.
அதிமுக அலுவலகத்திற்கு யாரும் சட்டவிரோதமாக செல்லக்கூடாது என வருவாய்த்துறை உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் உள்ள அனைத்து அரைகளும் வருவாய் துறையினரால் பூட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினர் மீண்டும் மோதிக்கொள்ளலாம் அதனால் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
ஒபிஎஸ்-சுடன் அதிமுகவினர் யாரும் கிடையாது. சீல் வைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை சட்டப்படி மீட்போம்- ஜெயக்குமார்
அத்துமீறி நுழைந்திருக்கிறார், ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். ஆட்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. ஓபிஎஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.ஓபிஎஸ் திமுகவுடன் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார் - ஜெயக்குமார்
ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலால் போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. தற்பொது அதிமுக அலுவலத்தில் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் உத்தரவிற்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். அதையடுத்து அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது
தற்போது ஓபிஎஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்து வருகிறார்
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
நாம் பொதுக்குழு முடிந்த உடன் தலைமைக்கழகத்தில் இருபெரும் தலைவர்களுக்கு மரியாதை செய்ய உள்ளோம் - ஈபிஎஸ்
ஓ.பி.எஸ் நீக்க கூறும் தீர்மானத்தை நிறைவேற்றி தந்த அனைவருக்கும் நன்றி - ஈபிஎஸ்
அதிமுக அலுவலகத்தில் 144 தடை விதிக்கப்பட்டதால் ஓபிஎஸ்- ஐ வெளியேற அதிகாரிகள் வலியுறுத்தல். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்கோட்டாச்சியர் சீல்வைப்பு.
அம்மாவின் அறையை கடப்பாரையால் உடைத்துள்ளனர். ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். லேப்டாப்பை எடுத்து சென்றுள்ளனர். சொந்த கட்சியின் தலைமை அலுவலகத்தை கொள்ளையடிப்பவர்கள் விசுவாசியா? திமுகவின் கைக்கூலி ஓ.பி.எஸ் - ஈபிஎஸ்
தீர்மானம் கொண்டுவரும் முடிவே இல்லை; அவருக்கு நன்மை கிடைத்தால் சரி; நன்மை கிடைக்கவில்லை என்றால் தவறு என்று சொல்பவர் ஓ.பி.எஸ்.இங்கே வருவதற்கு பதில் ரவுடிகளோடு தலைமைக்கழகம் செல்கிறார் ஓ.பி.எஸ் - ஈபிஎஸ்
அதிமுக என்ன கார்ப்பரேட் கம்பனியா? அதிமுகவில் இந்த பழனிசாமி இல்லை என்றால் சின்னசாமி பதவிக்கு வருவான் - ஈபிஎஸ்
சொந்த கட்சி கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டு கூட்டம் நடத்த கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது.தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்க கூடாது என்பதில் குறியாக உள்ளவர் ஓ.பி.எஸ்
இரட்டை தலைமையால் எவ்வுளவு கஷ்டப்பட்டோம் என்பது எனக்கு தெரியும். ஓ.பி.எஸ் எதெற்கெடுத்தாலும் சொல்வது, நான் விட்டுக்கொடுத்தேன் என்பது - ஈபிஎஸ்
அண்ணன் ஓ.பி.எஸ் திமுகவோடு உறவு வைத்து கொண்டுள்ளார். ஒரு கட்சித் தலைவரே இப்படி இருந்தால் அக்கட்சி எப்படி ஆட்சிக்கு வரும்- ஈ.பி.எஸ்
எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா எல்லா பகுதிகளிலும் கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் நடந்து வருகிறது. கமிஷன், கலக்ஷன், கரப்ஷனில் கண்ணும் கருத்துமாக திமுக அரசு உள்ளது - ஈபிஎஸ்
மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைப்பேன்; நீங்கள் எண்ணும் எண்ணத்தை நிறைவேற்றுவேன்.இந்த கட்சியில் பதவியை பெற்று எட்டப்பராக இருந்து அழிக்க நினைப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் - ஈபிஎஸ்
ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்காது என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.ஏதோ விபத்தில் திமுக ஆட்சிக்குவந்துவிட்டது, விபத்தில் முதல்வர் ஆனவர் ஸ்டாலின் - ஈபிஎஸ்
இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுகதான்.2500 பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை நிர்வாகிகள் ஆதரவோடு என்னை இடைக்கால பொதுச்செயலாளராக்கி உள்ளீர்கள் - ஈபிஎஸ்
சில எட்டப்பர்கள் கழகத்தில் இருந்து கலங்கம் கற்பித்து கொண்டு இருக்கிறார்கள் - ஈபிஎஸ்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதனால் நிறைவேற்றப்பட்டது என உங்களுக்கு தெரியும்.பெரியார், அண்ணா, அம்மாவுக்கு பாரத ரத்னா வேண்டும்.
ஈ.பி.எஸ் இனி எழுர்ச்சி தலைவன் எடப்பாடியார் என அழைக்க வேண்டும்- தமிழ்மகன் உசேன்
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர கடினமாக உழைப்பேன் - ஈபிஎஸ்
கட்சியை காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு - ஈபிஎஸ்
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
என்னை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும் கே.பி. முனுசாமிக்கும் எந்த வித உரிமையும் இல்லை. கட்சியின் தொண்டர்களோடு இணைந்து நீதியை பெறுவோம்.சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் - ஓபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமியையும் கே.பி. முனுசாமியையும் நான் நீக்குகிறேன் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ்- ஐ அதிமுகவிலிருந்து நீக்கியதாக ஒ. பன்னீர்செல்வம் தனியாக அறிவிப்பு
அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் - ஐ நிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
கழக பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கழக கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்க வலியுறுத்தல்
தான் கையப்பமிட்டு கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பன்னீர் செல்வம் கட்சியில் எந்தவித தியாகமும் செய்யாதவர்.தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு இணைந்து தலைமை கழகத்தில் கலவரம் செய்யக்கூடிய கேவலமான நிலைக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தை அரவணைத்தது மட்டுமின்றி துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்து கட்சியை வழிநடத்தியவர் ஈ.பி.எஸ் - கே.பி.முனுசாமி பேச்சு
உடனடியாக இன்றைக்கே ஓ.பி.எஸ் அவரோடு இருக்கும் சண்டாளர்களை நீக்க வேண்டும்- திண்டுக்கல் சீனிவாசன்
என்னை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் எடப்பாடியார் என்றுதான் சொல்வேன்- திண்டுக்கல் சீனிவாசன்
ஓ.பி.ரவிந்திரநாத் திமுக அரசு சிறப்பாக நடப்பதாக சான்று கொடுக்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன்
சசிகலா அவர்களை கட்சியில் சேர்க்கமாட்டோம் என நாம் கூறியுள்ளோம்; ஆனால் சையதுகான் மூலம் சசிகலாவை கட்சியில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்ற ஓ.பி.எஸ் முயன்றார் - திண்டுக்கல் சீனிவாசன்
நம்முடைய தலைமைக்கழகத்தை பிடிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். வெட்கம், மானம், சூடு, சொரனை ஏதும் ஓ.பி.எஸுக்கு இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்
ஆண்மையுள்ள கட்சித் தலைவரா நீங்கள் - ஓபிஸுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
கலெக்டர் லீவில் சென்றால் டி.ஆர்.ஓதான் இன்சார்கஜ் ஆக இருப்பார்; அதுபோல்தான் அம்மாவால் முதல்வராக ஓ.பி.எஸ் நியமிக்கப்பட்டார்- திண்டுக்கல் சீனிவாசன்
சினிமாவில் க்ளைமாக்ஸ் வரும், நாம் எதிர்பார்த்த க்ளைமாக்ஸ் பொதுச்செயாளாராக ஈ.பி.எஸ் அறிவிக்கப்படுகிறாரா என்பதுதான்.இடைக்கால.பொதுச்செயலாளராக நம் கதாயாகன் ஈ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
ஓபிஎஸ்-சை கட்சியில் இருந்து நீக்கக்கோரிய பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை தீர்மானமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவருவார் : கேபி முனுசாமி
ஓ.பி.எஸ் கட்சியை விட்டு நீக்க கோரி பொதுக்குழு கோஷம்.எதிரியை கூட மன்னிக்கலாம்; துரோகியை மன்னிக்க கூடாது. அரசியல் அனாதையாக ஓ.பி.எஸ் தனித்துவிடப்பட்டுள்ளார்- நத்தம் விஸ்வநாதன்
தீய சக்தி என எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியை ஓ.பி.எஸ் வானளாவாக புகழ்கிறார். கருணாநிதியை பாராட்டினால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பி.எஸ் மன்னிக்காது - நத்தம் விஸ்வநாதன்
ஓ.பி.எஸ் நாணயத்தின் இன்னொரு முகம் கொடூரமான முகம். ஓ.பி.எஸுக்கு நடிகர் திலகம் என்ற பட்டமே கொடுக்கலாம்- நத்தம்
துரோகம் இழைப்பதில் தயவுதாச்சன்யமே பார்க்க மாட்டார் ஓ.பி எஸ். தேனியில் அதிமுக தோற்றபோது சீ...போ என் முகத்தில் முழிக்கதே தங்கத் தமிழ்ச்செல்வனை தோற்கடித்ததே நீதான் என அம்மா அவரை திட்டி உள்ளார்.
ஓ.பி.எஸ் பேசும்போது யாரையும் நம்பமாட்டார்; இன்னும் சொல்லப்போனால் தன்னையே நம்பமாட்டார்- நத்தம் விஸ்வநாதன்
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் சலசலப்பால் 11 அதிமுகவினர்கள், 2 காவல்துறையினர் காயப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறையினருடன் வருவாய் துறையினர் ஆலோசனை.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ஆலோசனை.
இரட்டை தலைமை என்பது கழகத்திற்கு போதாத காலம். சீப்பை ஒளித்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? - நத்தம் விஸ்வநாதன்
திமுக ஆட்சியை எதிர்கொள்ள வலிமையான தலைமை தேவை.வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் இது என தங்கமணி கூறியுள்ளார்.
கட்சியின் வரவு, செலவு விவரத்தை பொதுக்குழுவில் வாசித்தார் அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர்
அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்ததாக தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக புகார்.
துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி. முனுசாமி இருந்த நிலையில், துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை பொதுச்செயலாளர் தேர்வு செய்வார் என கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை தலைமையால் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக முடிவு எடுப்பதில் சங்கடம், தாமதம் ஏற்பட்டது. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை என பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்திவருகின்றனர். நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார் என ஓபிஎஸ்க்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அமைப்பில் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளனர்
ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க விவாதித்து முடிவு செய்ய தீர்மானம்.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரும்வகையில் கட்சி விதி 20(அ) பிரிவு 2 அமல்படுத்தப்படுகிறது
கே.பி. முனுசாமியை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம்
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம்
நான்கு மாதங்களுள் பொதுச்செயலருக்கான தேர்தலை நடத்தி முடிக்க அஇஆதிமுக பொதுக்குழு தீர்மானம்
துணை ஒருங்கிணைப்பாளர் பதவி துணை பொதுச்செயலாளர் என மாற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவில் முதன்முறையாக துணை பொதுச்செயளாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது
பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
13.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது
14.சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது
15. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.
அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்
அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு செய்தல்
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்.
9.அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட கோரும் தீர்மானம் நிறைவேற்றுதல்
அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை, நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுகோள் விடுத்தல்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு தெரிவிப்பது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு செய்தல்
4.இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
5.நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
3.மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்.
4.இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
1. அதிமுகவின் அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது
2. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
கடந்த முறை போல் இல்லாமல் அதிமுக செயற்குழு தனியாகவும், பொதுக்குழு தனியாகவும் நடக்கிறது
பொதுக்குழு நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுக்குழு மேடையில் ஈபிஎஸ் ஏறினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக செயற்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்காக தமிழ் மகன் உசேன் அருகில் நாற்காலி போடப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து அதிமுக அலுவலகத்தில் இருக்கிறார்.
கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்தலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு
கட்சியின் உள்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றே பெரும்பாலானோர் எண்ணமாக இருக்கிறது எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு. பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் இராமசாமி வாசிக்கத்தொடங்கினார்.
இருத்தரப்பு வன்முறைக்கு இடையே அதிமுக தலைமை அலுவலத்தை ஓபிஎஸ் கைப்பற்றியுள்ளார்.
ஒபிஎஸ்க்கு சீட் ஒதுக்கியும் அவர் பொதுக்குழுவுக்கு வராமல் ரவுடிக்கூட்டத்தை வைத்து வன்முறையில் ஈடுபடுகிறார். அவரை பொதுக்குழு கண்டிக்கும் என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலத்தில் உள்ள பேனரில் இபிஎஸ் படத்தை ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.
இருத்தரப்பினரிடையே நடக்கும் வன்முறைக்கு இடையில் அதிமுக தலைமை அலுவலக கதவின் பூட்டை உடைத்து தடைகளை தகர்த்து ஓபிஎஸ் அலுவலகத்தின் உள்ளே சென்றுள்ளார்.
அதிமுக தலைமை கழக அலுவலகத்தின் புட்டை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவகத்தில் நடக்கும் வன்முறையில் ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பு ஆதரவாளர்களிடையே மாறி மாறி கல்வீசி தாக்குதல் நடத்தி கொள்கின்றனர். செருப்பு, சேர், கட்டை என கையில் கிடைக்கு பொருட்களை வைத்து தாக்குதல் நடத்தி கொள்கின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பு ஆதரவாளர்களும் சட்டையை பிடித்து கிழித்து கட்டிப்புறண்டு சண்டை போட்டு வருகின்றனர்.
அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.
தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கிறேன் என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழைச்சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமை அலுவகலத்திற்கு ஓபிஎஸ் புறப்படுகிறார். அவரது ஆதரவாளர்கள் ஏற்கெனவே அங்கு கூடியுள்ளனர். இன்று காலை முதல் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டு போடப்பட்டு உள்ள நிலையில் ஓபிஎஸ் அங்கு செல்கிறார்.
ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தகவல்.
தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்படுவார் என ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.
உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு இதுதான். கட்சியின் ஒரு தொண்டர் பொதுச்செயலாளர் ஆகிறார் என்பதுதான் வரலாற்று சிறப்பு என முன்னாள அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்போம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சற்று நேரத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்
மதுராந்தகம் அருகே நடந்த விபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற வேனும் கண்டைனர் லாரியும் மோதல் - 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு
அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு சென்று கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை சென்ற வேனும் கண்டைனர்லாரியும் மோதிய விபத்தில் 15 பேர் காயம்
பொதுக்குழு கூட்டத்துக்கு உறுப்பினர்கள் வருகைதர தொடங்கியதால் மதுரவாயல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
கடந்த முறை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில் இன்று அந்த ரூட்டை தவிர்த்தார் ஈபிஎஸ்
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்திலிருந்த புறப்பட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லம் வழியாக செல்லாமல் வேறு வழியாக வானகரம் நோக்கி பயணம்
அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவுக்குள் அனுமதி
கடந்த முறை காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இந்த முறை பிரசார வாகனத்தை பயன்படுத்துகிறார்
செல்லும் வழியெங்கும் இபிஎஸ்க்கு மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தன்னுடைய இல்லத்தில் இருந்து பிரசார வாகனத்தில் இபிஎஸ் வானகரம் நோக்கி புறப்பட்டார்
பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரத்துக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வரத்தொடங்கினர்
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கோயம்பேடு-பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் வானகரத்தில் அமைக்கப்பட்ட பேனர் கிழிப்பு
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிகிடைக்குமா? இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
சென்னை வாகனகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்
Background
AIADMK General Body Meeting LIVE Updates:
அதிமுக பொதுக்குழு இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். மேலும் அதிமுக ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு என பிரிந்து இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள அதே மண்டபத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று தினம் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். அதேசமயம் பொதுக்குழுவுக்கு தடைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு சொல்வதாக தெரிவித்துள்ளார்.
9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படியும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த பொதுக்குழுவில் போலி அடையாள அட்டை மூலம் வெளியாட்கள் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில் இம்முறை நவீன முறையில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதாவது மெட்ரோ ரயில் நிலையம் போல தடுப்புகள் அமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையுடன் கூடிய மின்னணு எண் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும் வகையில் ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுக்குழு, செயற்குழு நடக்கும் இடங்களில் 20 ஸ்கேன் பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -