அதிமுக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்
தமிழ் நாட்டில் 17 வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் கட்ட 3 - க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவித்தார்.
அதிமுகவின் இந்த அறிவிப்புகள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில் ;
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை. ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன், இன்னொரு ஆயிரம் சேர்த்து கொடுக்க போகிறார். இதனால் தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியில் இருந்து ரூ.15 லட்சம் கோடியாக மாறும்.
அதே போல் நகர்ப்புற பேருந்துகளில் ஆண்கள் இலவச பயணத்தை கேட்டார்களா ? ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பை எங்கிருந்து எடுப்பார்கள்.
EPS குடும்பத்துடன் பயணம் செய்வாரா ?
இலவச பேருந்து பயணம் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பேருந்தில் குடும்பத்துடன் செல்வாரா ? அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதே போல் வீடு கட்டிக் கொடுப்பதாக கூறி இருக்கிறார். இரு ஆட்சி காலத்திலும் கோழிக் கூடு போல் வீடு கட்டி கொடுக்கப்படுகிறது. அந்த வீட்டில் யாராவது இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.