தேர்தல் தோல்வி- அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திடீர் திருப்பங்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.  இதில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரிதுள்ளது.

Continues below advertisement

அந்த வகையில், தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி களம் இறங்கியது. ஆனால் தவெகவிற்கு ஆதரவு இல்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25எம்எல்ஏக்களும், இபிஎஸ் தலைமையில் 22 எம்எல்ஏக்களும் செயல்பட்டனர்.  சட்டமன்றத்திலும் தவெகவிற்கு ஆதரவாக 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தன். இதனால்  உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டதையடுத்து அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 30 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் அதிமுகவினர்

இந்த சூழ்நிலையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால் சட்ட சிக்கல் உருவாகும் என்ற காரணத்தால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கவில்லை. இதனால் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப முடியாமலும், தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தவெக சார்பாக அதிமுக எம்எல்ஏக்களிடம் பதவியை ராஜினாமா செய்து வந்தால், வருகிற சட்டமன்ற இடைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அப்போது போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தாக தகவல் வெளியானது. 

Continues below advertisement

இந்த நிலையில் தான், நேற்று யாரும் எதிர்பார திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் ராஜினாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து அடுத்த சில நிமிடங்களில் தவெகவில் இணைந்தனர்.  இதனையடுத்து இன்று அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ய இருப்பதாக காலையிலையே தகவல் வெளியானது.  உடனடியாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் இன்னும் கொறடா நியமிக்கவில்லை. அதுவும் கட்சி தாவலில் ஈடுபட்ட 25 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமா கடித்ததை எப்படி பெறலாம் என கேள்வி எழுப்பினர். ராஜினாமா கடித்தத்தை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டர். 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்  தனது பதவியை ராஜினாமா செய்ய சபாநாயகர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களோடு இசக்கி சுப்பையா வந்தார். அப்போது ராஜினாமா கடிதத்தை பெற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மறுத்து விட்டார்.

ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுப்பு

சட்டமன்ற விதிப்படி ராஜினாமா செய்யும் உறுப்பினர் தனது கைப்பட கடிதம் எழுதி வர வேண்டும். ஆனால் இசக்கி சுப்பையா டைப் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்த கடிதம் செல்லாது என்பதால் புதிய கடிதம் எழுதி வரும்படி சபாநாயகர் திருப்பி அனுப்பி வைத்தார். இதனையடுத்து தனது கைப்பட எழுதிய கடித்தத்தை சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா வழங்கினார்.  இதனை பெற்றுக்கொண்ட சபாநாயகர் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் பலம்  43 ஆகவும் , இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 27 ஆகவும் , வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 16 ஆகவும் மாறியுள்ளது.