அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த செங்கோட்டையன் கடந்த வாரம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். அந்த வகையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து தனி அணியாக செயல்படுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நடிகர் விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைய இருப்பதாகவும், அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அதே நேரம் திமுகவும் செங்கோட்டையனிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்
இந்த பரபரப்பான சூழலில் இன்று காலை அதிமுக கொடி கட்டிய காரில் தலைமைச்செயலகம் வந்த செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடித்ததை கொடுத்தார். அப்போது சபாநயகர் அறையில் செங்கோட்டையனிடம் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்ததை நடத்தியாக கூறப்படுகிறது. தவெகவில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்திருந்த நிலையில் திமுகவிற்கு செங்கோட்டையனை இழுக்க கடைசி கட்ட முயற்சியை திமுக தொடங்கியுள்ளது. எனவே இன்று அல்லது நாளையோ திமுகவிலோ அல்லது தவெகவிலோ செங்கோட்டையன் இணைவார் என கூறப்படுகிறது.