கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில், அதிமுக மற்றும் பாஜக இணைந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருந்தது. 2024 தேர்தல் போதும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தனி அணிகளாக தேர்தலை சந்தித்தது. இதனால் அனைத்து தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளுக்கும் படுதோல்வி கிடைத்தது. 

Continues below advertisement

கூட்டணி ஆட்சியை வலியுறுத்திய கட்சிகள்

தேர்தல் முடிந்த பிறகு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி தினகரன், ஜி.கே.வாசன் மற்றும் பாஜகவினர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணி உருவானது. 

கூட்டணி ஆட்சி - கூட்டணியில் குழப்பம்

மதுரை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதோடு, பொதுக்கூட்டத்திலும் பேசியிருந்தார். அமித்ஷாவின் பேசுகையில் ''டெல்லியில் அரவிந்த் கெஜரிவால் ஆட்சியோடு சேர்த்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. 

Continues below advertisement

2025 இல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ அதேபோல் 2026 இல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி கண்டிப்பாக மலரப்போகிறது. குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 2026 ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்பது உறுதி' என பேசியிருந்தார். அமித்ஷா பேசிய இந்த வார்த்தைகள் அரசியல் அரங்கில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்பையும் உருவாக்கியிருக்கிறது.

மறுத்த எடப்பாடி பழனிச்சாமி 

முன்னதாக கூட்டணி உருவாகிய சில நாட்களில், கூட்டணி ஆட்சி அமையுமா? என சந்தேகம் எழுந்ததற்கு, தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்தநிலையில் தான் மீண்டும் தமிழகம் வந்திருந்த அமித்ஷா கூட்டணி ஆட்சி குறித்து பேசி இருப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அமித்ஷா முதலில் பேசியது என்ன ?

பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக உடனான கூட்டணியில் தேர்தலுக்கு பின்பு வெற்றி பெற்றால்,‌ அதிமுகவுடன் பாஜகவிற்கு வழங்க வேண்டிய அமைச்சரைவை குறித்து தக்க நேரத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி என பாஜக தொடர்ந்து கூறி வந்தாலும் அதை அதிமுக மறுத்து வந்தது. ஆனால், பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணியில் விரிசல் ?

கூட்டணி ஆட்சி என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு துளியும் விருப்பமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட, 2006 தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் மற்றும் பாமக எப்படி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்ததோ, அதுபோன்ற ஆதரவைதான் 2026 தேர்தலிலும் எடப்பாடி பழனிச்சாமி விரும்புவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி என்பது இரு கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.