SP Velumani: அதிமுகவினரால் பேரவையில் ரகளை ”அதெப்படி வேலுமணி பேசலாம்” நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளி
ADMK SP Velumani: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது, எஸ்பி வேலுமணி பேச முயன்றதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ADMK SP Velumani: சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எஸ்பி வேலுமணி பேச முயன்றதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஸ்.பி. வேலுமணி பேச எதிர்ப்பு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மீதான, நம்பிக்கை வாக்கெடுப்பு மசோதா மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் சட்டமன்ற குழு தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அப்போது, அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையை நிகழ்த்தினார். அதன் பிறகு அதிமுக சார்பில் தானும் பேச விரும்பவதாக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழுவிற்கு தலைமை தாங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கோரிக்கை விடுத்தார். அதன்படி சபாநாயகரும் ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அசாதாரண நிலை ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடுமையாக முயன்று சமாதானபடுத்தினார்.
தவெக-விற்கு ஆதரவு - எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு
கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “ அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி. தொண்டாமுத்தூர் தொகுதியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும் நன்றி. ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் வரை இலவசம் என்ற திட்டத்தை 200 யூனிட்டாக மாற்றிய முதலமைச்சருக்கு நன்றி. அதேபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். இன்று மக்கள் தீர்ப்பளித்து முதலமைச்சருக்கு வாக்களித்து உள்ளனர். அதற்கு நாங்கள் அதிமுக சார்பில் வாக்களிக்கொறோம். நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது. 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்துள்ளோம். திமுகவை எதிர்த்து தான் நாங்கள் அரசியல் செய்துள்ளோம். அந்த அடிப்படையில் முதலமைச்சருக்கு மக்கள் வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அளித்த முடிவினை ஆதரித்து, முதலமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானித்திற்கு ஆதரவளிக்கிறேன்” என எஸ்.பி. வேலுமணி உரையாற்றினார்.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முன்னதாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் நாங்கள் சட்டமன்றத்தில் பணியாற்றிருக்கிறோம். அவர்களை குறிப்பிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினோம். அதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 47 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது சில கருத்து வேறுபாடுகள் கட்சியில் வருகிறது. அது எல்லா கட்சிகளிலும் வருகிறது. அதில் ஒரு தரப்புக்கு மட்டும் முதலமைச்சர் விஜய் ஆதரவு தெரிவிப்பது எந்தவித நியாயம் என தெரியவில்லை. அது குதிரைப் பேரத்திற்கு வழி வகுத்துவிடும் என்பதால் இதனை குறிப்பிடுகிறேன். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது. பதவிகளை கொடுப்பதாக குதிரை பேரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது” என பேசி இருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை என எஸ்.பி. வேலுமணி பதிலடி தந்துள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















