ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுக கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சேலம் மாவட்டத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி  திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு காஞ்சிபுரம் வழியாக சென்னை திரும்பினார்.

 

[tw]


[/tw]




சென்னை திரும்பும் வழியில் காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் தூவி வரவேற்பு அளித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என வாழ்த்து  கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு உற்சாகமாக திரும்பிச் சென்றார்.



 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின், பொதுச் செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது, தொண்டர்கள் இருபுறமும் நின்று மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதே போன்ற ஒரு வரவேற்பு காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களைத் தூவி அதிமுக கட்சியினர் வரவேற்பளித்தனர்.

 



தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மௌனமாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் வந்த எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் வாழ்க என கோஷமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 









 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண