மக்களவை தேர்தலில் 24ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் இபிஎஸ் அறிவிக்கிறார் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.

Continues below advertisement


அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, மக்களவை தேர்தலில் 24ம் தேதி அதிமுக வேட்பாளர்களை இபிஎஸ் அறிவிக்கிறார். யார் வந்தாலும் வராவிட்டாலும் தனியாக தேர்தலை சந்திக்கும் பலம் அதிமுகவுக்கு உண்டு.


மக்களவை தேர்தல் பரப்புரையை, வரும் 24 ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். அப்போது, நடைபெறும் பரப்புரையில் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். 


கூட்டணி குறித்து பேசிய கே.பி.முனுசாமி, பாமக கூட்டணிக்கு வராதது பேசுகையில், தர்மம் நல்ல பதிலை கொடுக்கும் என்று தெரிவித்தார்.


இந்த தேர்தலில் யார் யாருக்கு இடையே போட்டி என்பது முடிவு வெளியாகும் போது, தெரியவரும் எனவும்  தெரிவித்துள்ளார்.