சென்னை, ஓமந்தூரரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 


இந்தநிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 




முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :



  • வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

  • அண்ணா வழியில் அயராது உழைப்போம். 

  • ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

  • இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

  • மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண