இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில், கடந்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
ஒரே கட்ட தேர்தல்:
இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்திற்கான தேர்தல் முடிவுகள் குறித்து ஏபிபி- சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகள்:
மொத்த தொகுதிகள் - 68 இடங்கள்
பெரும்பாண்மை தேவை: 35 இடங்கள்
- ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வென்ற 44 இடங்களை விட குறைவானதாகும்.
- ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது.
- ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி , புதிய வரவான ஆம் ஆத்மி, பூஜ்ஜிய இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.
வாக்கு சதவீத விபரம்:
- ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி பாஜக 44.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 3.9 சதவீதம் குறைவாகும்.
- ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி காங்கிரஸ் 41.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 0.6 சதவீதம் குறைவாகும்.
- ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி, ஆம் ஆத்மி கட்சியானது 2.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி-சி வோட்டர் கணித்துள்ளது