மேலும் அறிய

2026 தேர்தல் களம்: டஃப் கொடுக்கும் இபிஎஸ்...கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்? ஹாட் சர்வே ரிப்போர்ட்!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்பில் தகவல்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம் சீட்டு வழங்குவது தொடர்பான விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக டாப் பைட் தரும் அளவிற்கு உள்ளதாக சர்வே முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்குக் காத்திருக்கின்றன. 

இந்த சூழலில் வெளியாகியிருக்கும் சர்வே, திமுக வட்டாரத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் இருக்கும் நிலையிலே, ஸ்டாலினை இபிஎஸ் நெருங்கிவிட்டார் என்பது அதிமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்வே திமுக வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தியது. கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை 234 சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆய்வாளர்கள், உதவியாளர்கள், 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பயிற்சி பெற்ற பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு அனைத்து பகுதிகளிலும் 70,922 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

1) அடுத்த முதல்வராக வர வாய்ப்பு யாருக்கு அதிகம்?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேரும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

2) தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு?

17.70 சதவிகிதம் பேர் திமுக என்றும், 17.30 சதவிகிதம் பேர் அதிமுக கட்சி என்றும், 12.20 சதவிகிதம் பேர் தவெக என்றும், 5 சதவிகிதம் பேர் பாஜக என்றும் கூறியுள்ளனர்.

3) அரசின் நலத்திட்டங்கள் மீதான மதிப்பீடு பற்றிய கேள்விக்கு:

காலை உணவு திட்டம் 72 சதவிகிதம் ஆதரவும், மகளிர உரிமைத் தொகை 62 சதவிகிதம் ஆதரவும், மகளிர் விடியல் பேருந்து திட்டம் 56 சதவிகிதம் ஆதரவும் பெற்றுள்ளது.

4) தமிழக மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க கட்சி எது என்ற கேள்விக்கு?

திமுக என்பதாக 25.30 சதவிகிதம் பேரும், அதிமுக என்பதாக 22.80 சதவிகிதம் பேரும், பாஜக என்று 15.70 சதவிகிதம் பேரும், தவெக என்று 11.20 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

5) மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு மோசம் என 77 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

6) அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு மோசம் என 81 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர்.

7) சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் திமுக அரசு மோசமாக உள்ளதாக 72 சதவிகிதம் பேர் மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | அசிங்கப்படுத்திய விஜய்! மகனை பறிகொடுத்த தந்தையை விரட்டியடித்த பவுன்சர்கள்
Shreyas Iyer Injury : ICU-வில் ஸ்ரேயாஸ் ஐயர்!விலா எலும்பில் பலத்த அடி மருத்துவர்கள் சொல்வது என்ன?
Madhampatty Rangaraj Wife| ’’உன் சதி திட்டம் எடுபடாதுகணவரை பறிக்க நினைச்சா..’’ஸ்ருதி பதிலடி!
Montha Cyclone | மழை நிக்குமா? நிக்காதா?ஆக்ரோஷமான மோந்தா புயல்கரையை கடப்பது எப்போது?
Tea Stall Fight CCTV  | ”2 நிமிடம் late..” டீ மாஸ்டர் மீது தாக்குதல் அட்டூழியம் செய்த தந்தை,மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Montha Cyclone: கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Shreyas Iyer: அச்சச்சோ..! ஸ்ரேயாஸ் அய்யர் ஐசியுவில் அட்மிட் - ரத்தக்கசிவு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Crime: லஞ்சம்லா வேணாம், மனைவிக்கு வேலை போதும்.. ரூ.37 லட்சம் சம்பளம் - ஃப்ராட் கணவனின் தில்லாலங்கடி
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Montha Cyclone Update: உருவானது ”மோன்தா” புயல் - சென்னையிலிருந்து 600KM தொலைவில், எங்கு? எப்போது? கரையை கடக்கும்?
Montha Cyclone Update: உருவானது ”மோன்தா” புயல் - சென்னையிலிருந்து 600KM தொலைவில், எங்கு? எப்போது? கரையை கடக்கும்?
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டம் ரத்து: திரும்பப் பெறுவதாக அறிவிப்பு- பின்னணி என்ன?
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டம் ரத்து: திரும்பப் பெறுவதாக அறிவிப்பு- பின்னணி என்ன?
Traffic Diversion: சூரசம்ஹாரம் விழா..பக்தர்கள் கவனத்திற்கு! திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்
Traffic Diversion: சூரசம்ஹாரம் விழா..பக்தர்கள் கவனத்திற்கு! திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்
Embed widget