PM Modi Address LIVE: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி..!!
PM Narendra Modi Address LIVE: நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி..!
விளக்கு ஏற்றுவது, கை தட்டுவதையெல்லாம் விமர்ச்சித்தார்கள். ஆனால் அவை மருத்துவ பணியாளர்களை உற்சாகப்படுத்த உதவியது.
பண்டிகை காலங்களிலும் மறக்காமல் முககவசம் அணியுங்கள்- மோடி கோரிக்கை
உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
கொரோனா என்ற பெரும் துயரத்தை சந்தித்த நாம் இனி எந்த துயரத்தை சந்திக்கலாம் என்கிற நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
நமது நாட்டில் தயாரித்த தடுப்பூசி மக்களை காப்பாற்றியுள்ளது; இனி வரும் காலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும்
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை காட்டியுள்ளோம்.
18 வயதிற்கு மேற்பட்டோரில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தினோம்
கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை நாட்டு மக்களிடம் எளிதில் கொண்டு சென்றது
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
வரலாற்று சாதனை படைக்க உதவிய நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்
தடுப்பூசி கடைக்ககோடியில் இருப்பவருக்கும் செல்வதை அரசு உறுதி செய்தது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தது.
மக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள தயக்கத்தை நம்மால் உடைக்க முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்.
தடுப்பூசி செலுத்துவதில் முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம். அனைவருக்கும் சமம் என்கிற அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்தியா எத்தகைய கடினமான சூழலிலும் சாதிக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்
சந்தேகம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் எப்படி தடுப்பூசி செலுத்த முடியம் ,பெற முடியும் என்று பேசப்பட்டது. ஆனால் அதை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்.
கடுமையான சோதனைக்கு இடையே இந்தியாவிற்கு கிடைத்த வாய்ப்பாக இது மாற்றப்பட்டுள்ளது.
மிகப்பெரிய சாதனையை நாட்டு மக்களாகிய நாம் படைத்திருக்கிறோம்-பிரதமர் மோடி
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது -மோடி
மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த சாதனை செய்ய காரணமானது
100 கோடி டோஸ் செலுத்தியது புதிய சாதனையின் தொடக்கமாகும்- பிரதமர் மோடி
257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
டெல்லியிலிருந்து நாட்டு மக்களுக்கு தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
காலை 10 மணிக்கு சரியாக தனது பேச்சை தொடங்க உள்ளார் பிரதமர் மோடி
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதை நினைவு கூறும் விதமாக இந்த உரை இருக்கலாம்
இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
Background
PM Narendra Modi Speech Today LIVE:
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 100 பாரம்பரிய சின்னங்களை தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் ஒளிரச் செய்ய இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், பெருந்தொற்றுக்கு எதிராக துணிந்துப் போராடிய நாட்டு மக்கள் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிர செய்ய மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சுகாதார மையங்கள் மீது மழை போல மலர்தூவவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -