Corona LIVE Updates : தமிழ்நாட்டில் 21, 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் இன்று மட்டும் 6000-ஐத் தாண்டியுள்ளது கொரோனா தொற்று எண்ணிக்கை. இன்று மட்டும் 144 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு. ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம் - ராகுல் காந்தி எம்.பி.
தமிழ்நாட்டுக்கு 2.75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் சென்னை வருகின்றன. 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,99, 25, 604இல் இருந்து 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3,57,229 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகளவில் 15.41 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 32.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 13.22 கோடி பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி முதல் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு. மளிகை, காய்கறி கடைகள், குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை. வரும் 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், வரும் 6ஆம் தேதி முதல் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -