அன்பான மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே பத்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் அமர்ந்திருக்கிறார்... நீண்ட நாட்களாக திருமணமாகாமல் வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு யோக காலக ட்டம்... குறிப்பாக குரு தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் செல்லும்போது நீங்கள் தேடிக் கொண்டிருந்த வரன் உங்க வீட்டு வாயில் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.... மூன்றாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்து விநாயகரின் வழிபாடு மூலம் நடக்கவே நடக்காது என்று இருந்த காரியத்தில் கூட வெற்றியை கொண்டு வந்து கொடுப்பார்…

Continues below advertisement

 நான்காம் இடத்தில் புதன் உச்சம் பெற போகிறார்... இது ஒரு மிகச் சரியான காலகட்டம்... காரணம் ராசி அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெறுவது, உடனிருந்த நோய்களிலிருந்து விடுபடுவதற்கான காலமாக அமைகிறது... குறிப்பாக உங்களைப் பற்றி பின்னால் பேசியவர்கள் கூட உங்களை உயர்வாக பேசுவார்கள்... உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவ்வளவு நாள் கிடைக்கவில்லை என்று இந்தீர்கள் தற்போது உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்று ஊதியத்தில் உயர்வை நீங்கள் எதிர்பார்க்கலாம்…

 புதன் கேதுவின் நட்சத்திரத்தில் செல்லும்பொழுது நீங்கள் ஆன்மிகத்தின் மூலமாக வெற்றிப்பாறை அடைய வாய்ப்பு உண்டு குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்களுடைய பொருளாதாரத்தின் உயர்வை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்... புதன் சந்திரனின் சாரத்தில் செல்லும்போது எதிர்பாராத தன வரவை நீங்கள் எதிர்பார்க்கலாம் அஷ்டமாதிபதி சனி உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து சில சங்கடங்களை கொண்டு வருவார்... நாளைக்கு முடிய வேண்டிய காரியங்கள் கூட பத்து நாட்கள் தள்ளிப் போகலாம்... அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை கோவிலில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானின் சன்னதிக்கு சென்று என் தீபம் ஏற்றி அவரை வழிபடுவதன் மூலம் தாமதமான காரியங்கள் விரைந்து முடிய வாய்ப்பு உண்டு… சனிக்கிழமை தோறும் கருப்பு நிற சட்டை அணிவதும் உங்களுக்கான பிரச்சினையில் இருந்து தீர்வை கொடுக்கும் ஆறாம் அதிபதி செவ்வாய் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செல்வதால் பூர்வீகம் சம்பந்தமான சொத்தில் சில வழக்கு உருவாக்கும் காலமாக இருக்கும்... ஆனாலும் முருகன் உங்களுக்கு துணை நின்று உங்களுடைய எல்லா பிரச்சினைகளிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவார்…

Continues below advertisement

 ராசி அதிபதி இறுதியாக செவ்வாய் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது நாள்பட்ட நோய்களில் கூட தீர்வு கிடைக்கும்.... குறிப்பாக சித்த மருத்துவத்தில் உங்களுடைய நோய்க்கான தீர்வுகள் கிடைக்கலாம் அதேபோல லாவாதிபதி ஐந்தாம் வீட்டில் செல்வன் மூலமாக குழந்தைகளாக உங்களுக்கு முன்னேற்றமும் லாபமும் ஏற்படு ம் பின்னால் பேசிய எதிரிகள் கூட உங்களுடைய குணம் அறிந்து முன்னாலே புகழ்வார்கள்... விளங்கி சென்றவர்கள் விரும்பி வந்து சேருகின்ற காலகட்டம்... தலைவர்கள் கூட அவர்கள் தற்போது நண்பர்களாக மாறுவார்கள் மூன்றாம் வீட்டில் அதிபதி என்பதால் இளைய சகோதரர் கூட ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு... அதேபோல கேதுவுக்கு வீடு கொடுத்த சூரியன் உச்சம் பெற்ற புதனோடு சேரும்போது உங்களுக்கான விரையங்கள் கட்டுக்குள் கொண்டு வரவும் 10 மடங்கு லாபம் எடுக்க வாய்ப்பு ிருக்கிறது... எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் தொழில் இருபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் உங்களுக்கு வேலைகளில் சில சங்கடங்கள் ஏற்படலாம் ஆனால் இறுதியாக உங்களுக்கு சாதகமாகத்தான் நாள் அமையும்…