மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூலை 22, 2025, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

பாலையூர் உதவி செயற்பொறியாளர்

தமிழ்நாடு மின் வாரியத்தின் மயிலாடுதுறை கோட்ட பாலையூர் உதவி செயற்பொறியாளர் ரேணுகா விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (22.07.2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

  • பாலையூர்
  • பருத்திக்குடி
  • காரனூர்
  • நக்கம்பாடி
  • மாந்தை 
  • கங்காதாரபுரம்
  • தேரழந்தூர்
  • கோமல்
  • கள்ளிக்காடு
  • பெரட்டக்குடி
  • கந்தமங்கலம்
  • வடமட்டம்
  • காஞ்சிவாய்
  • கோனோரிராஜபுரம்
  •  
  • மேக்கிரிமங்கலம்
  • பழையகூடலூர்
  • கொக்கூர்
  • திருவாலங்காடு
  • திருவாவடுதுறை
  • பேராவூர்

மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

மாறுதலுக்கு உட்பட்டது 

மின்தடை குறித்த இந்த அறிவிப்பு, மின்கட்டமைப்பு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து கடைசி நேரத்தில் மாறுதலுக்குட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னதாகவே திட்டமிட்டு, அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.