மயிலாடுதுறை: பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

அதன்படி, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணை மின் நிலையங்களில் வரும் 04.07.2026 (சனிக்கிழமை) அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் அது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு;

Continues below advertisement

1.மணக்குடி துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பொறிஞர் M. விஜயபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 33/11 கி.வோ மணக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மணக்குடி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த 

* சேமங்கலம்

* வேப்பங்குளம்

* மணக்குடி 

* மாப்படுகை 

* ஆலவேலி

* நத்தம்

* வேப்பங்குளம்

* சாவடி

* உளுத்துக்குப்பை

* மொழையூர்

* ஆனதாண்டவபுரம்

 * கீழிருப்பு 

மேற்கண்ட முக்கியப் பகுதிகள் மட்டுமன்றி, இந்த மின்பாதைகளைச் சார்ந்துள்ள சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இதே நேரத்தில் மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மின் நிறுத்தம் என்பது அவ்வப்போது ஏற்படும் நிர்வாக ரீதியிலான காரணங்களைப் பொறுத்து தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்றும் நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2. பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலைய மின் நிறுத்தப் பகுதிகள்

இதேபோல், பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் பொறிஞர் N. அருள்செல்வன், வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய இரு துணை மின் நிலையங்களிலும் வரும் சனிக்கிழமை (04.07.2026) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒருசேர மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

* பாலையூர்

* பருத்திக்குடி

* காரனூர்

* நக்கம்பாடி

* மாந்தை

* கங்காதாரபுரம்

* தேரழந்தூர் 

* கோமல் 

* கள்ளிக்காடு

* பெரட்டக்குடி 

* கந்தமங்கலம்

* வடமட்டம்

* காஞ்சிவாய்

* கோனேரிராஜபுரம்

* மேக்கிரிமங்கலம்

* பழையகூடலூர்

* கொக்கூர்

* திருவாலங்காடு 

* திருவாவடுதுறை 

* பேராவூர்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் இந்தத் துணை மின் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்களுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் இந்த 8 மணி நேர மின் நிறுத்த அறிவிப்பு பொருந்தும் என மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

மின் நுகர்வோர்களுக்கான ஆலோசனைகள்

மயிலாடுதுறை கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தங்களது செய்திக்குறிப்பில், மின் நிறுத்தக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை, குறிப்பாகக் குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுத் தடையின்றி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

துணை மின் நிலையங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மிக விரைவாகச் செய்து முடிக்கப்படும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், அதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளது.