மயிலாடுதுறையில் கொட்டும் மழையிலும் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் நனைந்தபடியே பங்கேற்றார்.

Continues below advertisement

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை நகரில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கிய நிலையில், சற்று தயங்காமல் கொட்டும் மழையிலும் தொண்டர்கள் நனைந்தபடியே பற்றுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்)  நூற்றாண்டு விழாவையொட்டி அணிவகுப்பு ஊர்வலம்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்)  நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடுதுறையில் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இதில், ஆர்எஸ்எஸ் மாநில இணை மக்கள் தொடர்பு அதிகாரி சின்னபாலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

Continues below advertisement

ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்துச் சென்றனர். சின்னக்கடைத்தெருவில் இருந்து புறப்பட்ட அவர்களின் அணிவகுப்பு ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் ஊர்வலம் தொடங்கிய இடமான சின்னகடை வீதியை வந்தடைந்தனர். சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

அணிவகுப்பு ஊர்வலம் நிறைவடைந்ததும் தொடங்கிய மழை

அணிவகுப்பு ஊர்வலம் நிறைவடைந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், சின்னகடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் பொதுக்கூட்டமானது தடையின்றி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்து கொட்டிய மழையில் தொண்டர்கள் நனைந்தபடியே பொதுக்கூட்டத்தில் உறுதியுடன் பங்கேற்றனர்.

மழை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நனைந்தபோதிலும், சின்ன சலசலப்பு இன்றி பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, இந்துமுன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்எஸ்எஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டம் மழையிலும் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டனர். 

முன்னதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டநிலையில், அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரணி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, அக்.25, நவ.1 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழகம் முழுவதும் 128 இடங்களில் பேரணிகள் நடைபெறுவது குறிப்பிட்டதக்கது.