மேலும் அறிய
சர்வதேச யோக தினம்: 51 தண்டால் எடுத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி
யோகாவை சிவன் தான் அறிமுகப்படுத்தினார். அதனால் தான் ஆதியோகி, யோகா உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு, மன வலிமையை அதிகரிக்கும் - தமிழக ஆளுநர் மாணவர்களிடம் பேச்சு.

மாணவர்களுடன் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர்
Source : whats app
உலக யோகா தினத்தை முன்னிட்டு மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சியில் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர்
11 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக வேலம்மாள் குளோபல் பள்ளி உசேன் போல்ட் மைதானத்தில் பிரம்மாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றுது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த யோகாசன நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற இந்த யோகாசன நிகழ்ச்சிக்கு மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநர் ரவி 51 தண்டால் எடுத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்
சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுசாசனம் என 37 வகையான யோகாசனங்களை ஆளுநருடன் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் செய்துகாட்டினர். மதுரை சிந்தாமணி வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சி முடிவில் தமிழக ஆளுநர் ரவி 51 தண்டால் எடுத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.
யோகா உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு, மன வலிமையை அதிகரிக்கும்.
இந்தயோகாசன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி பேசுகையில்..” என் இனிய சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள், என தமிழில் பேச்சை தொடங்கினார் ஆளுநர். ஜூன் 21 ஆம் தேதியில் தான் நீண்ட நேரம் சூரியனின் கதிர்கள் பூமியில் வந்து விழும். அதுதான் இந்த நாளில் முக்கியத்துவம் வாங்கியது. யோகாவை உலகிற்கு பாரதம் வழங்கியுள்ளது. யோகாவை சிவன் தான் அறிமுகப்படுத்தினார். அதனால் தான் ஆதியோகி, யோகா உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு, மன வலிமையை அதிகரிக்கும். மாணவர்கள் அனைவரும் ஆல மரத்து விதைகள் போன்றவர்கள். அதை போல் உங்கள் திறன்களை மேம்படுத்தி உறுதியாகவும் சிறப்பாக வாழ்வில் முன்னேற யோகா வழி ஏற்படுத்தி கொடுக்கும்” என்றார். யோகா பயிற்சி மேற்கொள்வதற்க்கு முன்பு ஆளுநர் பதஞ்சலி யோக மந்திரம் உச்சரித்து துவங்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















