முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் இனத்தினுடைய, தமிழ் மக்களுடைய வீரத்தை அடையாளமாக பறைசாற்றி இருக்கும் ,சீறிவரும் காளைகளை இளம் சிங்கங்கள் அடக்குகிற அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு நம்முடைய இனத்தின் அடையாளமாக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அந்த ஜல்லிக்கட்டு உரிமையை மீண்டும் பறிபோய் விடுமோ என்கிற ஒரு அச்சம்  ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் மத்தியிலே விவாதமாக இன்றைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது. காரணம்  உச்சநீதிமன்றத்திலே பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கிலே இதுக்கு தமிழக அரசு காலஅவகாசம் கேட்டிருப்பது நம்முடைய கவலை அதிகரிக்க செய்திருக்கிறது.



 

ஆகவே இன்றைக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிறோம் என்று விளம்பரம் தேடுகிற தி.மு.க அரசு இந்த வழக்கை தலைசிறந்த சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, தலை சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டுமே ஒழியே,கால அவகாசம் கேட்பது என்பது ஜல்லிக்கட்டு உரிமையை இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு விட்டுக் கொடுத்து விடுமோ என்கிற ஒரு அச்சம் இன்றைக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

 



 

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நவம்பர் 23 துவங்கும் என என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தான் இன்றைக்கு நம்முடைய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உடைய கேள்வியாக இருக்கிறது.

 

இதற்கு  பீட்டா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நீதி அரசர்கள் தமிழக அரசினுடைய கோரிக்கை மனுவை நிராகரித்திருக்கிறார்கள். இதுதான் அச்சத்திற்கு அடித்தளமாக இருக்கிறது. இதுதான் அச்சத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. ஆகவே ஏற்கனவே அறிவித்தபடி 23ம் தேதி விசாரணை துவக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதை அடிப்படையாக வைத்து தலைசிறந்த சட்ட வல்லுநர்களை வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உரிமையை காத்து தர வேண்டும். வீரத்தையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் ,நாகரீகத்தையும் தமிழ் சமுதாயத்தின் உயிருக்கும் மேலான நேசிக்கிற இந்த ஜல்லிக்கட்டு உரிமையை இந்த திமுக அரசு பறி கொடுத்து விடுமோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.



 

அம்மா ஆட்சிக் காலத்தில் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டப்பட்டது. 11.7.2011 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தனர். 19.5.2014 அன்று தமிழக அரசால் மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. 7.8.2015 புரட்சித்தலைவி அம்மா ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட பாரதப் பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க அனுமதி கேட்டு வலியுறுத்தப்பட்டது.

 

22.12.2016 ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அவசர சட்டம் நிறைவேற்றி பாரத பிரதமருக்கு புரட்சித்தலைவி அம்மா கடிதம் அனுப்பினார். அதனை தொடர்ந்து 19.12 .2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் பாரதப் பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட இளைஞர்கள் நாடெங்கும்  ஒரு கட்டுப்பாடுடன் ஒரு மௌன புரட்சியாக தொடங்கி அந்த புரட்சி பல்வேறு வகையிலே விரிவடைந்து ஒட்டுமொத்த உலக தமிழினமும் ஓரிடத்திலே அன்றைக்கு ஒரு உரிமையை போராட்டத்தை ஒரு உரிமை புரட்சியை அன்றைக்கு எழுப்பியதைக் கண்டு உலக கவனத்தை ஈர்க்கப்பட்டது.



 

 

அதைத் தொடர்ந்து 19.1.2017  சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானம் பாரத பிரதமருக்கு அம்மாவின் அரசு அனுப்பி வைத்தது. அதேபோல 20.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்காக அனுப்பப்பட்ட அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவருடைய ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018,2019, 2021ஆண்டுகளில்  இந்திய அரசியல் வரலாற்றிலே முதல்வர் நேரிலே வந்து பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்த அந்த வரலாறை படைத்தவர் எடப்பாடியார். அதனால் தான் இளைஞர்கள் மத்தியில் இன்றைக்கும் அசைக்க முடியாத செல்வாக்கோடு எடப்பாடியார் உள்ளார்.

 

இன்றைக்குள்ள திமுக அரசு, பீட்டா அமைப்பு தொடர்ந்து இருக்குற அந்த வழக்கில் அதை எதிர்த்து வழி காணாமல் ஜல்லிக்கட்டுக்கு மைதானம் வைத்து அதற்கு விளம்பரம் தேடுகிற இதை எச்சரிக்கையாக அல்ல, அரசின் கவனத்திற்கு செல்கிறேன், தமிழ் இனம் என்றால் ஜல்லிக்கட்டு , தமிழ் மொழி என்றால் ஜல்லிக்கட்டு, தமிழ் பண்பாடு என்றால் ஜல்லிக்கட்டு, தமிழ் பாரம்பரியம், இனம், மொழி, அனைத்திலும் வீரத்தின் அடையாளமாக இருக்கின்ற, ஜல்லிக்கட்டு உரிமையை திராவிட முன்னேற்றக் கழக அரசு பறிகொடுத்து விடுமோ? என்கிற அச்சம் இன்றைக்கு தமிழ் சமுதாயத்தில், உலக தமிழ் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தலை சிறந்த வழக்கறிஞர்கள் கொண்டு தொடர்ந்து நடைபெறுகிற உச்ச நீதிமன்றத்திலே அந்த வழக்கில் இந்த அரசு கவனிக்க வேண்டும்.

 

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை தொடர்ந்து நடைபெற அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முன் வருமா ?  கோடான ,கோடி தமிழ் இனத்தின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார்  வழிகாட்டுதலோடு இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்