விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, ஆய்வு மேற்கொண்டார்.

Continues below advertisement

பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(07.07.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது, வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும், சமூக நீதி விடுதியில்  மாணவர்களின் தங்குமிடம், கழிவறை வசதிகள், விடுதி வளாகத்தின் தூய்மை, வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்தும், வத்திராயிருப்பு பேரூராட்சி, 12 ஆவது பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், பண்டாரக்குடி தெரு, 1 வது பகுதியில் பொதுமக்களுக்கு  விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரின் அளவு குறித்தும், இந்து தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளையும், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டும் ஆய்வு செய்தார்.  

Continues below advertisement

ஆய்வுப் பணி

பின்னர், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும், இ-சேவை மையத்திலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,  பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையின் கீழ் ஈரமான திடக்கழிவு, உலர்ந்த திடக்கழிவு, சுகாதார திடக்கழிவு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமானதாகவும், சுவையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைத்து பகுதிகளுக்கும் குடிநீரை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க வேண்டும் எனவும்,  இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் உரிய காலக் கெடுவுக்குள் பரிசீலித்து, சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கிட வேண்டும் எனவும், மேலும், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை தொடர்புடைய அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,தெரிவித்தார்.  .