விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடுநாள் தினத்தை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் நடைபெற்ற  போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடுநாள் விழாவினையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 ஆம் நாளன்று விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. அரசு, தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 73 மாணவர்கள் பேச்சுப் போட்டியிலும், 69 மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பரிசுகள் அறிவிப்பு

Continues below advertisement

பேச்சுப்போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சவிதா முதல் பரிசாக ரூ 10000-மும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூ.பிரதீபா இரண்டாம் பரிசாக ரூ.7000-மும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி வ.லோகபிரியா மூன்றாம் பரிசாக ரூ.5000-மும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அதேபோல், கட்டுரைப்போட்டியில், மம்சாபுரம், பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.வைதேகிலட்சுமி முதல் பரிசாக ரூ.10000- மும், தோனூகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி இரா.சங்கீதா இரண்டாம் பரிசாக ரூ.7000-மும், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி மா.யோக சந்திரிகா மூன்றாம் பரிசாக ரூ.5000-மும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல் தெரிவித்துள்ளார்.