நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

Continues below advertisement

வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.

தேதிகள் விவரம் என்ன

Continues below advertisement

அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 05.08.2026  புத்தூர்  கிராமத்திலும், 06.08.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 07.08.2026  சமுசிகாபுரம் கிராமத்திலும்,  10.08.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 18.08.2026  தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 20.08.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 04.08.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 06.08.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 10.08.2026 அயன் நாச்சியார்கோவில்(தெய்வேந்திரி) கிராமத்திலும், 17.08.2026 பூவாணி, நல்லிங்கபேரி பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், 19.08.2026 களத்தூர், அம்மாபட்டி, மூவரை வென்றான் கிராமத்திலும், 21.08.2026 பிள்ளையார் குளம் கிராமத்திலும், 25.08.2026 குன்னூர் கிராமத்திலும், 27.08.2026 விழுப்பனூர் கிராமத்திலும், நடைபெற உள்ளது.

நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்

ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.