கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய-சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. - என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை

திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக. விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.  இக்கண்காட்சியை பொதுமக்கள், அனைத்து கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கண்டுகளிக்கலாம்.

Continues below advertisement

படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பினால் என்ன் செய்ய் வேண்டும்?

இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஓவிய சிற்பக் நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த விரும்பினால் ஏ4 தாள் அளவில் தங்களின் படைப்புகளின் போட்டோ அல்லது ஒளிஅச்சு நகலினை (Photo Copy) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ‘ஆ’ குடியிருப்பு, திருநெல்வேலி -07. தொலைபேசி எண்.0462-2901890 என்ற முகவரிக்கு 05.07.2026 தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். 

படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களின் ஐந்து படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.  அதில் சிறந்த படைப்புகளை தெரிவு செய்து,  தலா 7 கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000- இரண்டாம் பரிசாக ரூ.3,000- மூன்றாம் பரிசாக ரூ.2,000- காசோலையாக வழங்கப்படும்  மேலும், சிற்பக்கலை பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐம்பது ஒவிய சிற்பக் கலைஞர்களுக்கு மேற்கண்ட மூன்று நாட்களில் கலை பயிற்சி பட்டறையும் நடைபெறும். இக்கண்காட்சியில் படைப்புகளை காட்சிபடுத்தும் கலைஞர்களுக்கும் பயிற்சி பட்டறையில் பங்கு கொள்ளும் கலைஞர்களுக்கும், சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் என்.ஓ. சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.