விஜய் கட்சி: வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு! 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? திமுக ஆட்சி அமைக்குமா?
நடிகர் விஜய்க்கோ நிர்வாகிகளுக்கோ போதிய அனுபவம் இல்லை கட்டமைப்பு இல்லை இதன் காரணமாகத்தான் 41 பேர் உயிரிழந்தனர் - வைகோ

டிஜிபி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது, மத்திய அரசின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட வேண்டும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தனிச்சையாக ஆட்சி அமைக்கும். திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.

நண்பரின் மனைவி இறந்த நிகழ்விற்கு வர முடியாத காரணத்தினால் தற்பொழுது துக்கம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அனுபவம் இன்மை காரணமாகத்தான் கரூரில் 41 பேர் உயிரிழந்தனர். 8 மணி நேரம் காலதாமதமாக வந்ததால்தான் மக்கள் தண்ணீர் இன்றி சோர்வடைந்து உயிரிழந்தனர். கரூர் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் இதுவரை நடிகர் விஜய், அவரது நிர்வாகிகளோ நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு, அவருக்கோ அவரது உடன் இருக்கக்கூடிய தலைவர்களுக்கோ போதிய அனுபவம் இல்லை, கட்டமைப்பு இல்லை, கட்டமைப்பு மூலமாக தான் அதை ஒழுங்கு படுத்த முடியும் ஆனால் அவர்களிடம் அது இல்லை.டிஜிபி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாக கேட்ட கேள்விக்கு,

அவர் சொல்வது சரிதான் கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று குற்ற சாட்டப்பட்டு கூறி வருகிறார்கள் என்ற கேட்ட கேள்விக்கு, கரூர் வரும் பொழுது நடிகர் விஜய் எடுத்த உடனேயே காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் இந்த கூட்டத்திற்கு எங்களால் வந்து அடைய முடியாது. இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து வந்த காவல் துறையினருக்கு நன்றி சல்யூட் என்று கூறியுள்ளார். காவல்துறையினர் தான் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இப்போது புதிதாக கூறி வருவது சொல்வது குற்றம் சொல்வதற்காக கூறி வருகின்றனர்.

டிஜிபி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவது குறித்த கேள்விக்கு, மத்திய அரசு மொத்தத்திலேயே மாநில உரிமைகள் எல்லாம் கவலிகரம் செய்து வருகிறது. இது புல்டோசரை வைத்து நசுக்குவது போல இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆகையால் மத்திய அரசின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து வழங்க வேண்டும். இந்தக் கொள்கையை அண்ணாவிற்கு பின் கலைஞர் எடுத்துரைத்தார்.மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இதைத்தான் தற்பொழுது திமுக பின்பற்றி வருகிறது மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தனிச்சையாக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியதை விட சொல்லாததையும் தற்பொழுது முதல்வர் செய்து கொண்டு வருகிறார். திமுக கூட்டணி தமிழகத்தில் திமுக வலுவான கோட்டையாக திகழ்கிறது. தமிழகத்தில் பிஜேபி கால் ஊன்ற முடியாது.கால் ஊன்ற விடமாட்டோம் தமிழக மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளும் சனாதான சக்திகளும் பெரியார் மண்ணில் அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் திராவிட இயக்க பூமியில் கால் ஊன்ற முடியாது என தெரிவித்தார்.





















