வைகை அணை நீர் திறப்பு: தேனி, மதுரை, திண்டுக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! விவசாயிகள் உஷார்!
வைகைஅணையில் இருந்து கள்ளந்திரி மற்றும் பேரணை கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறப்பு.

மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது.

மேலும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையும் வைகை ஆற்றின் நீரை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக தெரிவித்துள்ள பொதுபணிதுறையினர். கால்வாய்கள் வழியாக இந்த தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தமிழக அரசின் உத்தரவுப்படி மதுரை கள்ளந்திரி மற்றும் பேரணை கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர்மின் நிலையம் வழியாக பெரியார் பாசன கால்வாயில் திறக்கப்படும் இந்த தண்ணீரின் மூலம் மதுரை கள்ளந்திரி பாசன கால்வாய் மற்றும் பேரணை கால்வாயின் கீழ் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் நிரம்பி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில்,
இன்று முதல் 7 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வைகை பொதுப்பணித்துறையினர். கால்வாய்கள் வழியே மூன்று மாவட்டத்திற்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்ட கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 46.06அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 429 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 1518 மி.கன. அடியாகவும் உள்ளது.
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
மஞ்சலார் அணை:
நிலை-47.10(57) அடி
கொள்ளளவு:288.85Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்:0 கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை- 121.20(126.28) அடி
கொள்ளளவு: 91 Mcft
நீர்வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 3கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-526.25(52.55)அடி
கொள்ளளவு:16.88Mcft
வரத்து: 9 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.






















