மதுரையில் தவெக மாநாடு வரும் வியாழன் அன்று நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு தொண்டர்கள் முன் சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.

தவெக மாநாட்டிற்காக மதுபானக்கடைகள் மூடப்படுகிறது
 
மதுரை பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில அளவில் இரண்டாவது மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன்குமார், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,” மதுரை பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில அளவில் இரண்டாவது மாநாடு 21.08.2025ல் நடை பெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL- 1) மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள்(FL-2) ஆகியவை 21.08.2025 அன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மதுபானக்கடை மற்றும் பார்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
 
மூடப்படும் இடங்கள்
 
* கூடக்கோவில் முக்ரோடு - கள்ளிக்குடி வட்டம்.
 
*  மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு -கள்ளிக்குடி வட்டம்.
 
* தூம்பக்குளம் -  கள்ளிக்குடி வட்டம்.
 
* கள்ளிக்குடி
 
*  சிவரகோட்டை - கள்ளிக்குடி வட்டம்.
 
*  வலையங்குளம் டோல்கேட் -திருப்பரங்குன்றம் வட்டம்
 
*  திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு
 
*  ஆலம்பட்டி, திருமங்கலம் வட்டம்.
 
*  மொட்டமலை, திருப்பரங்குன்றம் வட்டம்.
 
*  3 தொப்பூர், திருப்பரங்குன்றம் வட்டம். | அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பு.
 
* சிவரகோட்டை, கள்ளிக்குடி வட்டம்.
 
*  திருமங்கலம்
 
*  உசிலம்பட்டி சந்திப்பு,
 
 
* கூத்தியார் குண்டு -  திருப்பரங்குன்றம். ஆகிய இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
தவெக சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
 
தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு வருபவர்களுக்கு கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்.
 
* முன்புற பகுதியில் உள்ள 7 வழிகளில் மட்டுமே மாநாட்டு பந்தலுக்குள் வர வேண்டும்.
 
*  மேடை அருகே இரண்டாவது வரிசையில் இரண்டு பெட்டிகள் பெண்கள் மட்டும் அமர்வதற்கு ஒதுக்கீடு.
 
*  கேமராக்களில் வீடியோ எடுக்க கூடாது என அறிவுறுத்தல்...
 
*  பட்டாசு வெடிக்க தடை.
 
*  இரு சக்கர வாகனங்களில் மாநாட்டுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தல்.
 
*  திடலின் இரு புறங்களிலும் அவசர ஊர்தி செல்ல சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
*  இரு புறங்களிலும் தலா 10 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
 
* அவசர ஊர்தி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் யாரும் செல்லக்கூடாது.
 
*  தனியார் பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் கண்ணியமாக பேச வேண்டும்.
 
*  அவசர ஊர்தி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் யாரும் செல்லக்கூடாது.
 
*  தனியார் பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் கண்ணியமாக பேச வேண்டும்.
 
*  திடலுக்கு வருபவர்கள் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
 
* மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
 
*  அதிவேகமாக வரக்கூடாது போக்குவரத்து விதிகளை மதித்து மாநாட்டிற்கு வரவேண்டும்.
 
*  அவசர தேவை ஏற்படும்போது மாநாட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் அகற்றப்படும். - எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.