மதுரையில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அமைதி நல்லிணக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ், திமுக எம்எல்ஏ மணிமாறன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு.
 
 
திருமாவளவன் பேசியபோது:
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தாலும் களத்திற்கு வந்திருப்போம் கைதாகிருப்போம். இன்று அரசு எடுத்திருக்கிற நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு கடந்த திமுக அரசு எடுத்த நிலைப்பாடு தான்; ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசின் முடிவு மாறவில்லை. பெரும்பான்மை சிறுபான்மை என்பது அல்ல காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற. நடைமுறை எதுவோ அந்த நடைமுறைக்கு ஏதுவாக அரசு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. திமுக ஆட்சியின் போதும் சரி தவெக ஆட்சியின் போதும் சரி இரண்டு அரசு தரப்பு சார்ந்தவர்களும் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிற முடிவு காலம் காலமாக வழக்கமாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது தான் நடைமுறை. புதிதாக இன்னொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்பது தான் அரசு நிலைப்பாடு. இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக இங்கு கூடவில்லை, இந்துக்களுக்கும் சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது; சங்கி கும்பல்  எடுக்கும் நிலைப்பாட்டை எதிர்க்கிறோம்; முருக பக்தர்களையோ, கார்த்திகை தீபத்தையோ நம்புபவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை.
 
சர்வேக்கல் அல்ல சர்வே கல்லில் குழி இருக்காது இதில் குழி இருக்கிறது என்கிறார்கள்
 
இஸ்லாமிய துறவிகளை அடக்கம் செய்திருக்கிறார்கள். அந்த இடத்திற்கு பெயர் தான் தர்கா; 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். தர்கா சுற்றியுள்ள பகுதியும் படிக்கட்டுகளும் கொடிமரமும் இஸ்லாமியர்களுக்கு சொந்தம் 33 சென்ட் மீதம் முழுக்க எங்களுக்கே சொந்தம் என கோவில் தரப்பில்சொல்லப்படுகிறது. மீதமிருக்கிற பகுதியில் சமணர்களின் குன்றும் இருக்கிறது. அவர்களுக்கும் அங்கே வழிபாட்டு தளம் வைத்திருக்கிறார்கள் சமணர்களுக்கான மலை இஸ்லாமியர்களுக்கான மலை இந்துக்களுக்கான மலை என்று சொல்லத்தக்க சிறப்பு கூறிய மலைகுன்று திருப்பரங்குன்றம். கோயில் நிர்வாகத்திற்கு தீப மண்டபம் உச்சி பிள்ளையார் கோயில் சுப்பிரமணியசாமி கோயில் காசி விஸ்வநாதர் கோயில் தவிர எஞ்சிய பகுதி தொல்லியல் துறைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். நில உரிமை தொடர்பான பிரச்சனை தான் முதலில் இருந்தது 1931இல் லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பளித்தது அப்போதெல்லாம் தீபம் தொடர்பான பிரச்சனையே கிடையாது இப்போது சர்வேகல்லா? தீப தூணா? என்று சொல்லக்கூடிய தீபத்தூணை பற்றி யோசிக்கவே இல்லை. இந்த பிரச்சனையை இந்து முன்னணி 1990 இல் திடிரென கிளப்புகிறார்கள். இந்த தூண் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது; அங்கு தான் தீபம் ஏற்றுவோம் என கூறினார்கள். அந்த தூண் பாதுகாப்பான இடம் கிடையாது அந்த கல் அடிப்பகுதி நுனிப்பகுதி தீபம் ஏற்ற தகுதி வாய்ந்ததா? என விவாதத்துக்கு உட்பட்டது.
 
திருவண்ணாமலையில் மகா தீபம்
 
400 லிட்டர் நெய் ஊற்றி  பல மீட்டர் காடா துணியால் திரி செய்து தான் தீபத்தை ஏற்றுவார்கள் அப்படி ஏற்றினால் தான் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு அது தெரியும். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுகிறார்கள் எந்த ஒரு மலை உச்சியிலும் தீபம் ஏற்றினால் அது மகாதீபம். இங்கு மகா தீபம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இருக்கிற தீபமண்டபத்தில் ஏற்றப்படுகிறது; வெட்ட வெளியில் இருக்கும் காற்று அடிக்கும் அது தொடர்ந்து எரிய முடியாது ; அவ்ளோ பெரிய தீபத்தை ஏற்றுகிற போது அதனை தாங்குகிற வலிமை இந்த தூணுக்கு இல்லை. தூண் இடிந்துவிடும் வெடித்து விடும் இவர்கள் சொல்லுகின்ற தூண் தீபம் ஏற்றுவதற்கு தகுதியே இல்லாத ஒரு தூண். அதில் தீபமே ஏற்ற முடியாது வீம்புக்கு வம்பு இழுக்கிறார்கள். இதனை நீதிமன்றத்திலே கேள்வியாக எழுப்பி விட்டார்கள். அதற்கு என்ன சொல்கிறார்கள் என்றால் நாங்கள சின்னதாக ஏற்றுகிறோம் என கூறுகிறார்கள். அது தீபத்தூண் இல்லை அதை எப்படி தீபத்தூண் என சொல்கிறது. அது சர்வேக்கல் அல்ல சர்வே கல்லில் குழி இருக்காது இதில் குழி இருக்கிறது என்கிறார்கள்.
 
வன்முறைகளை தூண்டி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம்
 
தீபத்தை வைப்பதற்கு அந்த குழி தோண்டப்பட்டதால் அல்லது சர்வே கருவியை வைப்பதற்கு அந்த குழி தோண்டப்பட்டது வேறு ஏதாவது காரணத்திற்காக இடைக்காலத்தில் யாராவது, அதில் பள்ளம் தோண்டினார்களா? இதுதான் ஆய்வுக்கு உட்பட்டது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லி விட்டார்கள் எனில் உயர்நீதிமன்றத்தில் சொன்னதையோ சாமிநாதன் கண்டுபிடிப்பையோ நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை தடை விதிக்கிறோம் இவர்கள் விஞ்ஞானி போல கண்டுபிடித்து தீப தூண்தான் என்றார்கள். அதனை  தீபத்தூண் இல்லை என சொல்லிவிட்டார்கள். கோயில் நிர்வாகத்தை சார்ந்தவர்கள்  நாங்கள் இதுவரையிலும் எங்களுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து இந்த தூணில் தீபம் ஏற்றியதே இல்லை என அவர்களே சொல்லியிருக்கிறார்கள். வம்பை இழுக்கிறவர்கள் சங்கிகள் கோயில் நிர்வாகத்தை சார்ந்தவர்கள் அல்ல உண்மையான முருகா பக்தர்கள் கிடையாது. உண்மையிலேயே கார்த்திகை தீபம் ஏற்றக்கூடியவர்கள் இல்லை. இந்துக்களாக உணரக்கூடிய இந்து மக்கள் பிரச்னை எழுப்பவில்லை. அவர்களும் இந்த கோரிக்கையை எழுப்பவில்லை நிலம் சம்பந்தமான கோரிக்கை எழுப்பினார்கள் அது 100 ஆண்டு கால பிரச்சனை அது வேறு. தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையை அந்த கோயில் நிர்வாகத்தில் சார்ந்த எவரும் எழுப்பவில்லை. எழுப்புகிறவன் யார் என்றால் அப்பண்டமான சங்கி கும்பல். இவர்கள்  இந்தியா முழுவதிலும் இப்படித்தான் பிரச்சனையை செய்து வன்முறைகளை தூண்டி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது தான் அவர்களின் நோக்கம் 
 
இடைக்கால தீர்ப்பை வழங்கியது ஏற்புடையது
 
பல முயற்சிகளை தமிழ்நாட்டில் எடுத்துப் பார்த்தார்கள். அவர்கள் முயற்சி எடுபடவில்லை தமிழ்நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த முடியவில்லை. அதற்காகத்தான் இப்போது சாதிய அரசியலை கையில் எடுத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் அதனை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த அடிப்படையில் தான் இந்துக்களுக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலே ஒரு மோதலை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பரவும் மதுரையை அதற்காக களமாக மாற்று பார்க்கிறார்கள் எனவே அந்த தூணில் செய்யப்பட்டிருக்கிற பள்ளம் சர்வே கருவி வைப்பதற்கானதா அல்லது தீபம் ஏற்றுவதற்கா? தீபமேற்றுவதற்கு 5 சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் ஆழம் வேண்டும் சர்வே கருவி வைக்க வேண்டும் என்றால் ஒரு சென்டிமீட்டர் பள்ளம் இருந்தால் போதும் அந்த பள்ளத்தை யார் ஆய்வு செய்வது அது ஒரு  அறிவியல் பூர்வமான முடிவு. மகாதீபம் ஏற்ற போவதில்லை என்கிறபோது மகாதீபம் தானே மக்கள் வழிபாடு செய்வதற்கானது சிறிய தீபம் ஏன் ஏற்ற வேண்டும். அதற்கான அவசியம் என்ன வந்தது அதற்கான தேவை என்ன வந்தது. ஏனென்றால் மக்களிடம் பகைமையை ஏற்படுத்த வேண்டும். இதுதான் பொது மக்களிடம் எழுப்பும் கேள்வி. மக்களே பிளவுபடுத்தி விடுகிறார்கள் அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இங்கு கூடியிருக்க கூடிய யாரும் இந்து கடவுளுக்கு எதிரானவர்கள் அல்ல மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது வேறு கடவுள் மறுப்பு என்பது வேறு என்னை யாரும் கோவிலுக்கு கூப்பிட்டால் செல்வேன்  என் மீதான நம்பிக்கையை வைத்து மரியாதை வைத்து அழைக்கிறார்கள். எனது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இரவோடு இரவாக வந்து விடுகிறேன் என கூறிவிட்டு வந்தேன். எத்தனையோ கும்பாபிஷேகத்தை நான் நடத்தி வைத்துள்ளேன். என் தாய்க்கு நம்பிக்கை உள்ளது. என்  தம்பிகளுக்கும் உறவுகளுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர்களது உணர்வுகளை நான் கொச்சைப்படுத்தவில்லை. எனக்கு புண்ணியம் கிடைக்க வேண்டுமென போகவில்லை என்றால் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்காக போகிறேன். கார்த்திகை தீபம் ஏற்றுவதில் உடன்பாடு உள்ள மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். வழக்கமாக எந்த இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது அந்த இடத்தில் ஏற்ற வேண்டும் தீப மண்டபம் தான் என்று சொல்ல முடியும். தீப மண்டபம் அடித்தளம் உயரம் அமைத்து கொப்பரை வைப்பதற்கான அகலம் உள்ளது. நாங்கள் யாரும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. வழக்கமான இடத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக ஏற்ற ஏற்றும் இடத்தில் ஏற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு அரசும் அதைத்தான் கடந்த ஆட்சியின் போது செய்தது. இந்த ஆட்சியின் போது செய்கிறது. இதைத் தாண்டி உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை இடைக்கால தீர்ப்பை வழங்கியது ஏற்புடையது அல்ல அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.