இரண்டாம் நாள் சுருளி சாரல் திருவிழாவில் செல்ல பிராணிகளான நாய்களின் கண்காட்சியை கால்நடை பராமரிப்புத் துறையினர் வெகு  விமரிசையாக நடத்தினர். வெற்றி பெற்ற செல்ல பிராணிகளின் உரிமையாளருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை பரிசாக வழங்கினார்கள்.


Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?




தேனி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு பருவ மழைகாலத்தினை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ள சுருளி அருவியில்  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுருளிசாரல் திருவிழாவினை வருடம் தோறும் நடத்துவது வழக்கம். இந்த வருட சாரல் திருவிழாவினை  நேற்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் அரசு துறை சார்ந்த கண்காட்சிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள்.


தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?




இரண்டாம் நாளான இன்று விழாவின் சிறப்பம்சமாக கால்நடை பராமரிப்பு துறையினர்சார்பில் செல்லபிராணிகளான நாய்களின் கண்காட்சியினை நடத்தினார்கள். இந்த கண்காட்சியில் அரிய வகை நாய் இனங்களான ராட்வீலர்,கன்னி,கிரேட் டேன், புல்லி குட்டா,ஜெர்மன் பிக் சபேடு,லேபர் டாக், சைபீரியன் ஷஸ்சியா ,மற்றும் தமிழ்நாட்டின் நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை மற்றும் தேனி மாவட்ட புகழ்பெற்ற கோம்பை என அரிய வகை நாய்களை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர்.


Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?




சிறிய ரகம், நடுரகம், பெரிய ரகம் என மூன்று தரவரிசை அடிப்படையில் நடைபெற்ற இந்த கண்காட்சி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அரிய வகை நாய்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நாய்களின் உரிமையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.வ்இந்த போட்டியில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வன சுந்தர் என்பவர் சிறிய ரகம் நாய் மற்றும் பெரியரகம் நாய் போட்டியில் முதல் பரிசினை தட்டிச் சென்றனர். இந்த சாரல் திருவிழாவினை கண்டு ரசிக்க வந்த ஏராளமான வெளி மாநில மற்றும் மாவட்ட சுற்றுலாப் பயணிகள் பள்ளி மாணவ மாணவியர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.