மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் பிரிவு 88(9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (AITP) வழங்க அதிகாரம் அளிக்கிறது. அதாவது சுற்றுலாப் பயணிகள் யாத்திரை, திருமணம்/சுற்றுலா நோக்கங்களுக்காக பார்வையிடுதல் போன்ற காரணங்களுக்காக அனுமதி சீட்டு (AITP) வழங்கப்படுகிறது.



சமீபத்திய புகார்களின் அடிப்படையில், காரணங்களை ஆராய்ந்ததில், மேலே கூறப்பட்டுள்ள வகையில் (AITP) அனுமதி பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறுவகையில், செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது.


ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லாமல் பல இடங்களில் பயணிகளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி, இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி, இறக்கி பயணிகள் பேருந்துகள் போல் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ்/இ-டிக்கெட் மற்றும் ரெட் பஸ், அபி பஸ் போன்ற பல்வேறு பஸ் டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக (சுற்றுப்பயண குழு அமைப்பாளரிடமிருந்து அல்ல) கட்டணத்தை வசூலிப்பதாக தெரிய வருகிறது.


ஒரு மாநிலத்திலிருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கி விடுதல், அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் (அனுமதி) விதிகள் 2023-க்கு எதிராக, சுற்றுலாத் திட்டம்/ஒப்பந்தத்தின்படியும், பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமல்  இயக்குவதாக தெரிய வருகிறது.



எனவே, (AITP) நிபந்தனைகளின் ஒப்பந்தத்தின்படி திட்டமிட்ட பாதை மற்றும் தேதியைப் பின்பற்றாமல் இருப்பது, போக்குவரத்து விதிகளின்படி குற்றமாகும்.மேலும், விதிமுறைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுகிறது. இதுகுறித்து, பிற மாநிலங்களிலிருந்து AITP-களைப் பெறுவதில் முறையற்ற நடைமுறைகளை பின்பற்றி வாகனங்கள் இயங்குவதாக  போன்ற பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.


AITP யின் கீழ் இயங்கும் சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கான பயண விவரங்கள் மற்றும் இந்தப் பதிவுகள் அதிகார வரம்பிற்குட்பட்ட போக்குவரத்து அதிகாரம்/வேறு ஏதேனும் சட்ட அமலாக்க அதிகாரிக்கு தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.




மேலும் மோட்டார் வாகனத் துறை மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் /சிறப்பு சோதனை இடங்களிலும் மீதமுள்ள இடங்களில் காவல் சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளின் விவரங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணத்திட்ட விவரங்கள், மற்றும் சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் வழி ஆகிய விவரங்கள் பதிவுச் செய்ய வேண்டும். (AITP) சுற்றுலா வாகனங்கள் தமிழ்நாடு அரசின் நிபந்தனைகளை மீறினால், சட்டங்கள் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.