தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும்  நகர்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

இதனால் தமிழ் நாடு முழுவதும் பட்டா மாறுதல் போன்றவைகளுக்கு ஜமாபந்தி நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல். தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பங்கள், தேனி மாவட்டத்தில்  அனைத்து வட்டங்களிலும் 22.05.2025 முதல் 30.05.2025 வரை நடைபெற உள்ள வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தியில்) ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் தேதிகள் விபரம் வருமாறு:- 

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளிலும், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளிலும், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025ஆகிய தேதிகளிலும், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025 மற்றும் 29.05.2025 ஆகிய தேதிகளிலும், பழனி வட்டாட்சியர் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025, 29.05.2025, 30.05.2025 ஆகிய தேதிகளிலும், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025, 28.05.2025, 29.05.2025 ஆகிய தேதிகளிலும், வேடசந்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025, 27.05.2025 மற்றும் 28.05.2025 ஆகிய தேதிகளிலும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.05.2025, 23.05.2025 மற்றும் 27.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.