தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் ஐஓசி அலுவலகம் அருகே இருந்து, நத்தம் வரை 35 கி.மீ.க்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2018 ஆண்டு தொடங்கியது. இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம்  வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது. 


 





இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒன்று என பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடைய பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.



 

மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதே போல் இப்ப பாலத்தின் வழியாக சென்னை செல்வோர் ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில் அய்யர்பங்களா பகுதியில் பாலத்தின் மேல் உச்சியில் தேன் கூடு கட்டி இருந்தது. இந்த தேன் கூட்டில் உள்ள தேனி பயணிகளை கொட்டிவிடும் என்பதால் தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.