உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும்.  இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 26 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் அருணாசல பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. 


 





கோயிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி கண் சிறப்பு பிரிவு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளின் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மேல் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் யானை புத்துணர்வு பெற குளியல் தொட்டி அமைக்கப்பட்டு இன்று நிதியமைச்சர் திறந்து வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது நான் அமைச்சராகுவதற்கு முன்பே நான் தனிப்பட்ட முறையில் இங்கே தொடர்ந்து வழிபாடு செய்து வருகிறேன். எப்போது எல்லாம் நான் இங்கு வருவேனோ அப்பல்லாம் யானையை பார்த்து செல்வேன்.



 

யானையை நல்ல வகையில் உறுதி செய்து பராமரிக்கலாம் என்று நோக்கத்துடன் 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு யாணைக்கு கண் பிரச்னை வந்தபோது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போது பல முயற்சிகள் எடுத்தேன். ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அந்த துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இதை எடுத்துக் கூறி ஆலோசனை செய்து இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்தோம். தாய்லாந்து நாட்டில் உள்ள யானைகளின் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. யானை கல் பகுதியில் நிற்தால் சில பிரச்னைகள் வந்தது. கல்லில் நிற்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு மண்ணுல நிற்கிற மாதிரி ஏற்பாடு செய்துள்ளோம். தண்ணீர் தொட்டி அமைத்தால் புத்துணர்வு கிடைக்கும் என்று ஆலோசித்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்து கோயில் வளாகத்தில் 23லட்சத்து 50 ஆயிரத்தில் அமைத்துள்ளோம்.



 

இந்த குளியல் தொட்டியில் யானை இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாடியதை காண முடிந்தது. கோயிலில் இறைவனை வழிபாடு செய்தாலும் பராமரிப்பு, பழமை மாறாமல பாதுகாப்புடன் வைத்திருப்பது முக்கியம். கோவிலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் சிறந்த மேலாண்மைக்கு அழகு. பல கோயில்களில் இது போன்ற பிரச்னை இருக்கிறது என்றார். என்னை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல தலைமுறைகளாக வழிபாடு செய்பவனாக, அமைச்சராக இந்த கடமையை செய்வதில் ஆர்வத்துடன் இருந்தேன். இந்த சூழ்நிலையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டிப் போட்டே வைத்திருந்த யானை இந்த நீரை பார்த்து மகிழ்ச்சியுடன் விளையாடியாது. புறாக்கள் மேலிருந்து கழிவுகளை போடும் போது பாக்டீரியாக்கள் மூலம் யானைக்கு ஏதாவது நோய்  ஏற்படலாம் என்பதனால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.