கடந்த 2019-ஆம் ஆண்டு மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலருக்கு போலி ஆவணங்கள் மூலம் 53 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கியூ பிரான்ஞ் போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கோரியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரியும்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலி  ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது இதனையடுத்து கீழமை நீதிமன்றம் மூலமாக விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.






 





 

இந்நிலையில் மதுரை மாவட்ட 4ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாக்யராஜ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் இளவரசன் மற்றும் மத்திய பாஸ்போர்ட் அதிகாரிகள்,  தபால் துறை அலுவலர்கள்,போலியாக பாஸ்போர்ட் பெற்ற  20 பேர் என மொத்தம் 39 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து 39பேரிடமும்  குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.