தாமிரபரணி ஆற்றல் ஆடைகள் மற்றும் பிற பொருட்களைக் கொட்ட தடை விதிக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றை மாசு படுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க மதுரை அமர்வு உத்தரவு.
ஆனந்தவிலாஸ் மண்டபத்தை அருள்மிகு பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதோடு, கோவிலின் செயல் அலுவலர் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து மண்டபத்தை அதன் பழைய பாரம்பரிய வடிவத்திற்கு மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
தாமிரபரணி ஆற்றல் ஆடைகள் மற்றும் பிற பொருட்களைக் கொட்ட தடை விதிக்கப்படுகிறது.
நெல்லை பாபநாசத்தைச் சேர்ந்த சிவனுபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "நெல்லை அம்பாசமுத்திரம் ஆனந்த விலாஸ் மண்டபத்தை, ஆக்கிரமித்ததாக கூறி தனக்கான அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, " தாமிரபரணி ஆற்றல் ஆடைகள் மற்றும் பிற பொருட்களைக் கொட்ட தடை விதிக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றை மாசு படுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என கடுமையான எச்சரிக்கைகள் பொதுமக்களுக்குச் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சியில் உள்ளாட்சியில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அஸ்தியை
சுடப்படாத மண் பானைகளில் கரைக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
