மேலும் அறிய

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள் கவனத்திற்கு.. கசப்பான சம்பவங்கள் நடைபெற்றால் ரூ.1லட்சம் !

உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது இவ்வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர், திடீரென்று  மரணம் எய்தும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1,00,000- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படும் - சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்.
 
அயலகத் தமிழர் நல வாரியம்
 
தமிழக அரசின் அறிவிப்பின்படி அயலகத் தமிழர்களின் நலனை உறுதிபடுத்த, 'அயலகத் தமிழர் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இவ்வாரியத்தில் சுமார் 28,000 நபர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக அயல்நாடு செல்லும் தமிழர்கள் அதிகளவில் முதல் நிலை தொழிலாளர்களாக (Blue Collar Workers) செல்கின்ற நிலையில் எதிர்பாராத விதமாக அயல்நாடுகளில் இறக்கும்போது அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தார் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். 
 
நிதயுதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்
 
குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து துன்புறும் அயலக தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசாணை (நிலை) எண்.369 பொது (மறுவாழ்வு-1)த் துறை நாள்.10.06.2025ன் படி ரூ.1,00,000 நிதயுதவி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  மேற்கண்ட நிதியுதவி பெறுவதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பெரும்பாலான நபர்களுக்கு நிதியுதவி வழங்க இயலாத நிலை உள்ளது. அயல்நாடுகளுக்கு பணிநிமித்தமாக செல்வோர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களுடன் https://nrtamils.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினராக சேர்ந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினராக பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களாக பான் அட்டை நகல்/ ஆதார் அட்டை நகல்/ ஓட்டுநர் நகல் /வாக்காளர் அடையாள அட்டை நகல்/ கடவுச்சீட்டு நகல்,  புகைப்படம்(PNG /JPG/ JPEG Format - below 5MB) போன்ற ஆவணங்களை கொண்டு உறுப்பனராக பதிவு செய்து கொள்ள வேண்டும். 
 
நல வாரியத்தில் உறுப்பினர்
 
நிதியுதவி பெற தகுதியாக, அயல்நாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் இந்நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். (அனைத்து வகை இறப்பிற்கும் இத்திட்டம் பொருந்தும்).  உயிரிழந்த நபர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். (உறுப்பினர் அட்டை காலாவதியாகமல் இருக்க வேண்டும்). உயிரிழக்கும் போது அயல்நாட்டில் முறையான ஆவணங்களுடன் பணியில் இருந்திருக்க வேண்டும். தேவைப்படும் ஆவணங்களாக, உயிரிழந்தவரின் கடவு சீட்டு (இந்திய தூதரகத்தால் இரத்து செய்யப்பட்டது). அயல்நாட்டின் இறப்பு சான்று மற்றும் இந்திய தூதரகத்தின் இறப்பு சான்று. உயிரிழக்கும் போது அயல்நாட்டில் பணிபுரிந்ததற்கான சான்று (Visa, Work Permit, Civil Id., Residence Id. , நிறுவன அடையான அட்டை முதலியவை), வாரிசு சான்று, வருமான சான்று மற்றும் ஆதார் அட்டை இருக்க வேண்டும்.
 
நிதியுதவி வழங்கப்படும்.
 
மேலும், இத்திட்ட செயல்பாடு ஆனாது தகுதியின் அடிப்படையில் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும். குடும்பத்தினரின் சான்றுகளின் அடிப்படையில், குடும்பத்தினர் வறிய நிலையில் இருக்கின்றார்களா என்பதற்கான அறிக்கை மாவட்ட நிருவாகம் மூலம் பெறப்படும். விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்கு பின், தெரிவு செய்யப்படும் குடும்பத்தினருக்கு (வாரிசுதாரருக்கு) ரூபாய் ஒரு இலட்சம் வழங்க நிதி மாவட்ட நிருவாகத்திற்கு அனுப்பப்பட்டு, மாவட்ட நிருவாகம் மூலம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்ட விவரம் மாவட்ட நிருவாகத்திடமிருந்து அறிக்கையாக பெறப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணபிப்போர், அயல்நாட்டில் உறுப்பினர் உயிரிழந்த ஒன்பது மாத காலத்திற்குள் குடும்பத்தினர் விண்ணப்பித்திடல் வேண்டும். உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது இவ்வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget