அதிமுகவின் 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட சார்பில் பொதுக்கூட்டம்  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசும்போது,"நம் மின்னல் வேகத்தில் இந்த கூட்டத்தை முடிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் திடீரென்று நமது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் ஆலோசனை கூட்டம் போட்டிருந்தார்கள். இன்று அரசின் முக்கிய பிரச்சினையான நமது கட்சியின் முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளர் மாவட்டச் செயலாளராக இருந்த அருமை அண்ணன் கே.எஸ்.செங்கோட்டையன் அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசி இறுதியாக கட்சி கட்டுப்பாட்டை நீக்கியதற்காக அவரைக் கட்சி அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கம் என்று சொல்லி நீக்கி இருக்கின்ற அந்த நிகழ்ச்சிக்கு சென்று வருவதில் தாமதம் ஆகியுள்ளது.

Continues below advertisement




சட்ட திட்டத்துடன் நமது கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. திமுகவாக இருந்தால் ஈ, காக்கா கூட இங்கு நடக்க முடியாது. காவல்துறை கூறியபடி அனைவரும் வழிவிட்டு உட்கார்த்து இருக்கிறீர்கள். இதுதான் அதிமுக, கலவரம் பண்ணுவது திமுக. இது மக்களுக்கு நன்றாக தெரிகிறது. தேர்தல் வைத்தால் இரட்டை இலைக்கே ஓட்டு போட மக்கள் தயாராகி விட்டார்கள். இன்று விலைவாசி உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விளையும் உயர்ந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு ரூ. 1000 கொடுத்துள்ளேன் என முதல்வர் கூறுகிறார். 3 வருடம் பிறகே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் பேசிய பின்பே ரூ.1000 பாதி மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.


மீதம் உள்ள மகளிர்க்கு ரூ.1000 விரைவில் கொடுப்போம் என உதயநிதி கூறுகிறார். இன்னும் ஆறு மாத காலமே உள்ளது. திருநெல்வேலி அல்வா போல் காண்பித்து திருப்பதி நாமத்தை போட்டு விடுகிறார்கள்.மகளிருக்கு ரூ.1000 வழங்குகின்றனர். ஆனால், அனைத்தையும் டாஸ்மாக்கிற்கு கணவர்கள் எடுத்து செல்கின்றனர். கணவர்களிடம் கேட்டால் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கேட்கிறார்கள் அதை குறைக்க சொல்லுங்கள் என சகோதரர்கள் கூறுகின்றனர். மின்சார பிரச்சினையால் திண்டுக்கல்லை சுற்றியுள்ள மில்கள் செயல்படவில்லை. எப்போது, மின்சாரம் வருகிறது என தெரியவில்லை. மின்சாரம் கிடைத்தாலும் அதிக கட்டணம் லட்சக் கணக்கில் வசூல் செய்யப்படுகிறது. தற்போது ஜவுளிகள் வடநாட்டில் சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மின்சார கட்டணத்தினால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து 2026 இல் மீண்டும் முதலமைச்சராக வர உள்ளார். இது உள்ளம் கையில் நெல்லிக்கனி. 2021 தேர்தலில் அரசு அதிகாரிகளால் நான் வெற்றி பெற இருந்த வாக்கு சதவீதம் குறைந்தது. ஆனால் தற்போது திமுகவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அடுத்து வரும் தேர்தலில் முதல் ஓட்டு போடப் போவது அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் தான்.


எடப்பாடி முதலமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பாஜகவுடன் இணைந்து நாட்டை நாசமாக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று ஸ்டாலின் பேசுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது திமுகவில் பலர் மந்திரிகளாக இருந்தனர். அப்போது பாஜக இனிப்பான கட்சி. அதிமுக சேர்ந்தவுடன் மோசமான கட்சி. நாட்டை அழிக்கும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இருக்கின்றோம் என ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக தனியாக நின்றால் ஈசியாக ஜெயித்து விடலாம். பாஜக மற்றும் அவர்களுடன் இருக்கக்கூடிய நான்கு, ஐந்து கட்சிகள் வந்தவுடன் இப்போது வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை ஸ்டாலின் உணர்ந்து கொண்டு பல்வேறு பொய்யான செய்திகளை எடப்பாடி மீது சுமத்திக் கொண்டிருக்கிறார். கரூர் விஜய் வந்ததுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையினர். இதுவரை 4 இடத்தில் பேசியுள்ளார். அங்கு எப்படி கூட்டம் கூடியது. எப்படி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு தெரிந்திருக்க வேண்டும். கரூரில் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. விஜய் நாசமா போகட்டும், எப்படியாவது போகட்டும் என விட்டுவிட்டனர். அதன் விளைவு 41 பேர் உயிரிழந்துள்ளனர்.


இறந்த பின்பு பல்வேறு சூழ்நிலைகள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள். ஒரே முடிவு சிபிஐ விசாரணை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கேட்டார்கள். உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். முத்துராமலிங்க தேவர் விழாவில் மதுரையில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார்.அப்போது எடப்பாடி பழனிச்சாமி 172 இடங்களில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டோம் அங்கு த.வெ.க கொடியுடன் தொண்டர்கள் வந்தார்கள். அவர்களை அரவணைக்கும் விதமாக பிள்ளையார் சுழி போட்டுள்ளோம் என கூறினேன். சென்னையில் நீர் புறம்போக்கை யாருக்கும் தெரியாமல் பெரிய கம்பெனிக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த செய்தி வந்துள்ளது.கருணாநிதி இருக்கும் பொழுதும் ஊழல், மகன் இருக்கும் பொழுதும் ஊழல் கீழே இருந்து மேல் வரை எங்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது.இன்று டிடிவி தினகரன், சசிகலா அம்மா, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஏற்கனவே இங்கு இருந்தவர்கள். கடந்த முறை ராமநாதபுரம் ஓபிஎஸ் மற்றும் தேனியில் டிடிவி தினகரன் தோற்றுவிட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு 18 எம்எல்ஏக்களை தனியாக எடுத்துக்கொண்டு சென்று இந்த ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலினுடன் தினகரன் திட்டம் போட்டிருந்தார்.11 எம்எல்ஏ-க்களை ஓ. பன்னீர்செல்வம் வைத்துக்கொண்டு பார்த்தார். ஆனால் இடைத்தேர்தலில் 9 எம்எல்ஏக்களை வெற்றி பெற வைத்தார்கள்.


9 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையில் பல்வேறு சித்து வேலைகளை கருணாநிதி செய்தார். ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முறையும் திமுக தான் வெற்றி பெறும் எனக் கூறுகிறார். போடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நிற்கும் பொழுது, அவரை எதிர்த்து நின்ற வெண்ணிலாடை நிர்மலா என்ற புறா கட்சி சுயேச்சை வேட்பாளருக்கு ஏஜென்டாக செயல்பட்டவர். ஓபிஎஸ் பல்வேறு வழக்குகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக மீது போட்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தான் கட்சி சின்னம், கொடி என எல்லாமே உள்ளது என தெரிவித்துவிட்டது. செங்கோட்டையன் தினகரன் சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து விட்டனர். இனி இந்தியாவையே அழித்து விடுவார்கள் என செய்திகள் வெளியாகும். எங்களது பெயர் வெளியே தெரிகிறது என்றால் அது கட்சியினால் வந்தது. வேறு ஏதேனும் கதை எடுத்துக்கொண்டு சென்றாள் என்னை காரி துப்ப மாட்டார்களா? கட்சியினால் வளர்ந்து கட்சி தொண்டர்களால் உருவாக்கி ரத்தத்தை சிந்தி அத்தனை தோழர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற செங்கோட்டையன் அவர்கள் கேவலமான சூழ்நிலையில் தற்போது உள்ளார்.


தேவர் ஜெயந்தி விழாவில் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மூத்தவரான செங்கோட்டையினை நடுவில் வைத்து இடிக்கின்றனர். அவர் ஓரமாக செல்கிறார் முதல் நாளே இந்த நிலை என்றால்? இருக்கும் இடத்தில் இருந்தால் தான் நமக்கு மரியாதை. ஈன பிறவிகளாக உள்ளனர். ஓபிஎஸ் போடாத நாடகம் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. அத்தனையும் செய்து பார்த்தார். ஓபிஎஸ், தினகரன் உட்பட அனைத்து நபர்கள் தலைமேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது.லண்டனில் ஹோட்டல் வைத்திருப்பதாக தினகரன் மீது வழக்கு உள்ளது ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளார். முன்னாள் முதல்வர் உதவியாளராக இருந்த சசிகலா தினகரன் திவாகரன் ஆகியோர் பல கோடி சொத்து சேர்த்துள்ளனர். அனைத்தும் விசாரணை செய்து மத்திய அரசு வைத்துள்ளது. இவர்கள் சிறைக்கு செல்லும் நான் வெகு தூரம் இல்லை. தற்போது தினகரன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேரும் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம் என கூறுகிறார். எடப்பாடி துரோகி எனக் கூறுகிறார். அவர் அப்பா வீட்டு பணத்தையா எடுத்துக்கொண்டு சென்று விட்டார். எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டதால் அவர் முதலமைச்சரானார். மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அனைத்து எம்எல்ஏக்களையும் ஒன்றிணைத்து எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. சாதாரணமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களையே அனைத்து எம்எல்ஏக்களும் தேர்ந்தெடுத்தார்கள். ஏன் ஓபிஎஸ் வரவில்லை. அது இயற்கை, விதி அவ்வளவுதான். தற்போது ஒன்றிணை வேண்டும் என கூறுகின்றனர் ஆனால் தினகரன் அமமுக கட்சி வைத்துள்ளார். ஓபிஎஸ் மன்றம் என வைத்துள்ளார்.




செங்கோட்டையன் உடன் இருக்கும் 18 பேரை முதலில் எடப்பாடி பழனிச்சாமி நீக்கிவிட்டார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா மேலிருந்து ஆசிர்வாதம் கொடுப்பதால் தான் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் அதிக கடன் வாங்கியது ஸ்டாலின் அரசு மட்டுமே. ஒவ்வொரு குடும்பத் தலைவரின் பெயரிலும் மூன்று கோடி ரூபாய் கடன் உள்ளது. ஆனால் ஸ்டாலின் என்பது கோடி ரூபாய் செலவில் பேனா சிலை வைத்துள்ளார்.திமுக அண்ணாவை மறந்துவிட்டு பத்து ரூபாய் பாலாஜி தலைமையில் கலைஞர் முப்பெரும் விழா நடத்துகின்றனர். நாம் அண்ணா பெயரில் 54 வது தொடக்க விழாவை நடத்தி வருகிறோம். அண்ணா பெயரில் கட்டிடமா அல்லது திட்டமோ திமுக அரசு செயல்படுத்தவில்லை. அதிமுக கட்சியை அழிப்பதற்கு ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடிகர்களை தூண்டிவிடுகிறார்.


யார் வந்தாலும் உண்மைதான் நிற்கும். டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை நம்பி இருக்கும் தோழர்கள் இனியும் அங்கு இருக்க வேண்டுமா என்பதை யோசிங்கள். அனைவரும் அதிமுக வாருங்கள் இருகரம் கூப்பி அனைத்து, அனைத்தையும் சரி செய்வோம். முன்னாள் முதல்வர் பெயரை வைத்து கொள்ளையடித்த கும்பல் சசிகலா தினகரன் குடும்பம் இதற்கு உறுதுணையாக இருப்பவர் ஓபிஎஸ். தினகரன் சசிகலா ஓபிஎஸ் செங்கோட்டையன் ஆகியோர் தனியாக கட்சி ஆரம்பித்து எங்களது கட்சி சின்னம் என ஆரம்பித்து நாங்கள் மகாத்மா காந்தி மைத்துனர்கள், இயேசு புத்தர் பேரப்பிள்ளைகள் என ஓட்டு கேட்க வேண்டும். அப்பொழுதுதான் மரியாதை என்ன என்பது தெரியும். எம்ஜிஆர் பெயரை வைத்து ஏமாற்றலாம் என செங்கோட்டையன் மற்றும் மற்றவர்கள் நினைக்கிறார்கள். அதை யாரும் நம்பாதீர்கள். நான் கட்சியில் இருந்து சென்று விட்டால் என்னை நன்றி கெட்ட நாய் என திட்டுவார்கள். அது தான் அவர்களுக்கும் என பேசினார்.