மேலும் அறிய
தெற்கு ரெயில்வேக்கு புதிய தலைமை செய்தி தொடர்பு அதிகாரி.. யார் இந்த எஸ். என். நரேன் !
இவருக்கு முன் இந்தப் பொறுப்பில் இருந்த எம். செந்தமிழ் செல்வன் தற்போது ராயபுரம் லோகோ ஷெட்டில் மூத்த பிரிவு மின்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ். என். நரேன்
Source : whatsapp
எஸ். என். நரேன் அவர்கள், பயணிகள் வசதிகள், செயல்திறன் மேம்பாடு, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இந்திய ரெயில்வேயில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தெற்கு ரெயில்வேக்கு புதிய தலைமை பொது தொடர்பு அதிகாரி
எஸ். என். நரேன், தெற்கு ரெயில்வேயின் தலைமை பொது தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். இதற்கு முன், அவர் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு & சுற்றுலா துறை இணை அமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார் 2010ஆம் ஆண்டு இந்திய ரெயில்வே டிராஃபிக் சேவை (IRTS) அதிகாரியாக சேர்ந்த எஸ். என். நரேன் அவர்கள், பயணிகள் வசதிகள், செயல்திறன் மேம்பாடு, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இந்திய ரெயில்வேயில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சேலம் பிரிவில் பிரிவு செயல்பாட்டு மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
தெற்கு ரெயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் செயல்பாட்டு மற்றும் வர்த்தக துறைகளில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். பின்னர், அவர் நியூ டெல்லியில் பயோடெக்னாலஜி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் துணை செயலாளராகவும், மேலும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு & சுற்றுலா துறை இணை அமைச்சரின் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார். தெற்கு ரெயில்வேயில் அவர் திருச்சிராப்பள்ளி பிரிவின் மூத்த பிரிவு வர்த்தக மேலாளர், தெற்கு ரெயில்வே துணை தலைமை செயல்பாட்டு மேலாளர் (போக்குவரத்து பாதுகாப்பு), சென்னை மற்றும் பாலக்காடு பிரிவுகளில் பிரிவு வர்த்தக மேலாளர், சேலம் பிரிவில் பிரிவு செயல்பாட்டு மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ராயபுரம் லோகோ ஷெட்டில் மூத்த பிரிவு மின்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்திய ரெயில்வேயின் பல முக்கிய திட்டங்கள் மற்றும் கொள்கை முயற்சிகளின் செயல்பாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார். எஸ். என். நரேன் அவர்கள், கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திர பொறியியல் பட்டம் பெற்றவர். இவருக்கு முன் இந்தப் பொறுப்பில் இருந்த எம். செந்தமிழ் செல்வன் தற்போது ராயபுரம் லோகோ ஷெட்டில் மூத்த பிரிவு மின்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















