மேலும் அறிய

நகை திருட்டு புகாரில், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பா..?

”இந்த பிரச்னையில் என்னை கூட அடித்து விசாரணை செய்தனர். என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் நீதி கிடைக்க வேண்டும். - என கேட்டுக் கொண்டனர்.

இறந்த அஜித்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சூழலில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோயிலில் காவலாளியாக பணி செய்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அருகே உள்ளது மடப்புரம். இங்கு பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில்
இங்கு தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகனான அஜித்குமார் (27) தற்காலிக முறையில், காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில் மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி (75) தனது மகள் நிகிதாவுடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27) சக்கர நாற்காலி எடுத்து வந்து கொடுத்தார். அப்போது  காரை ‘பார்க்கிங்’ செய்யுமாறு நிகிதா தெரிவித்தார். 
 
இளைஞரிடம் போலீஸ் விசாரணை
 
இதையடுத்து காரை அஜித்குமார் ‘பார்க்கிங்’ செய்துள்ளார். வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, அங்கு பையில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த சுமார் 10 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாரிடம் நிகிதா புகார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில், அஜித்குமாரிடம் காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வெளியே வந்த அவரை தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதித்ததில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் மற்றும் திருப்புவனம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே உறவினர்கள் காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சிவகங்கை எஸ்.பி விசாரணை
 
இது குறித்து உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி கூறுகையில்...," கோயிலில் எனது அண்ணன் வேலையின் போது காரில் வந்த குடும்பத்திற்கு உதவியுள்ளான். இந்நிலையில் நகை காணவில்லை எனக் கூறி எனது அண்ணன் உட்பட 5 பேரை அடித்து விசாரணை செய்தனர். இந்த சூழலில் என் அண்ணன் உடலில் அடி தாங்கமுடியாமல் சிகிச்சையில் இருந்த போது, உயிரை விட்டுவிட்டான். இந்த பிரச்னையில் என்னை கூட அடித்து விசாரணை செய்தனர். என் அண்ணனுக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை. போலீஸ் அடித்ததில் தான் உயிரிழந்துள்ளான். எனவே இதில் நீதி கிடைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். இந்த சூழலில் இறந்த அஜித்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சூழலில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget