சிவகங்கை அருகே அங்கன்வாடி மையத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் வாரிய ஊழியர்கள் இணைப்பை துண்டித்து மீட்டரை கழற்றி சென்றதால் குழந்தைகள் அவதி.

Continues below advertisement

காஞ்சிரங்கால் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சி எம் ஜி ஆர் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மையத்தைச் சுற்றிலும் பராமரிப்பு செய்யாமல் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் காணப்படுவதுடன் பாம்புகள், விச பூச்சிகள் அடிக்கடி அப்பகுதியில் தென் படுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப பயப்படுகின்றனர்.

Continues below advertisement

மின் கட்டணம் செலுத்தாததால்   அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட மீட்டர் பெட்டி

அங்கன்வாடி மையத்திற்கு அரசு இரண்டு வருடங்களாக மின் கட்டணம் செலுத்தாததால் அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீட்டர் பெட்டியை மின் வாரிய ஊழியர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.