சிவகங்கை மாவட்டம் பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொதுமக்கள் - குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.
சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார், இன பொதுமக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி, 25.07.2026 அன்று காலை 9.00 மணிக்கு தேவகோட்டை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி பகுதியிலும், 01.08.2026 காலை 9.00 மணிக்கு காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் பகுதியிலும், 08.08.2026 காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் பகுதியிலும், 16.08.2026 காலை 9.00 மணிக்கு திருப்புவனம் மற்றும் மானாமதுரை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், திருப்புவனம் பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம்கள்
முன்னதாக, 18.07.2026 சிவகங்கை வட்டம், வட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. எனவே, மேற்கண்ட ஆவணங்கள் இல்லாத, பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாளில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.
