மேலும் அறிய
சிவகங்கை: சிவகங்கை மக்களே உஷார்.. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் கிடைக்காது, முக்கிய அறிவிப்பு !
சிவகங்கை: காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம்! நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் கிடைக்காது - மாவட்ட முக்கிய அறிவிப்பு.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளைய தினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை (10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது – மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தண்ணீர் வராது
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி, முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில், 9.12.2025 அன்று மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக, மின் நிறுத்தம் (EB Power Shutdown ) செய்யப்படவுள்ளதால், நீருந்து பிரதான குழாய்களில் சிறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் நாளையதினம் செவ்வாய்கிழமை (9.12.2025) மற்றும் புதன்கிழமை (10.12.2025) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















