பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் ஆயுஷ் (காலிப்பணியிடம் 3), ஆயுஷ் ஆலோசகர் (யோகா & நேச்சுரோபதி) (காலிப்பணியிடம் 3), மாவட்ட திட்ட மேலாளர் (காலிப்பணியிடம் 1), தரவு உதவியாளர் (காலிப்பணியிடம் 1), சிகிச்சை உதவியாளர் (காலிப்பணியிடம் 5) மற்றும் பல்நோக்கு பணியாளர் (காலிப்பணியிடம் 4) ஆகிய ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 முதல் 29.12.2025 வரை வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை 630561 என்ற முகவரிக்கு 29.12.2025ம் தேதிக்குள் பதிவுத் தபால் மூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.