செகந்திராபாத் - இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி மாத இறுதி வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) பிப்ரவரி   01 முதல் பிப்ரவரி 22 வரை புதன்கிழமைகளில் இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.



மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) பிப்ரவரி  3 முதல் பிப்ரவரி 24 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 



இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும்  வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2  மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண