இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Continues below advertisement

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ நிறுவனம் கொடைக்கானல் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

Continues below advertisement

கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில், உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு (ரோப்வே) அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வு (Detailed Feasibility Report - DFR) தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வுப் பணிக்காக, திறந்த டெண்டர் முறையில் வாப்காஸ் லிமிடெட் (WAPCOS Limited) நிறுவனம் ரூ.79 லட்சம் மதிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, திட்டம் தொடர்பான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் போக்குவரத்து கணக்கெடுப்பும் நிறைவு பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் இயக்குநர் டி. அர்ச்சுனன், உதவி மேலாளர் ராஜா சுப்பிரமணியம் ஆகியோர் கும்பக்கரை அருவி அருகே நேரில் ஆய்வு மேற்கொண்டு, ரோப்வே நிலையம் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டனர். இந்த விரிவான சாத்தியக்கூறு ஆய்வு 2026 செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது திடீரென மாறிய கொடைக்கானல் வானிலை மாற்றத்தால். படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் ஒரே நேரத்தில் மாறி, மாறி காணப்படும் காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் அவ்வபோது அடர்ந்த பனி மூட்டமானது தரையிறங்கி காணப்படுவதால் குளிந்த சூழல் நிலவி வருகிறது. ஒரே நேரத்தில் சாரல் மழை, பனி மூட்டம், வெயில், இதமான காற்று என்று பல்வேறு கால நிலை மாறி மாறி வரும் நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து தங்களது குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.