முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் 14 மாவட்டத்தைச் சேர்ந்த 1.50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,”தமிழ்நாட்டிலேயே இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பேரழிவை ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு 14 மாவட்டங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து தனி தீவுகளாக காட்சியளிக்க கூடிய ஒரு அவலத்தை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டை கருத்தில் கொள்ளாமல் ஏதோ இவர் மட்டும்தான் இந்த தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர் போலவும், இன்றைக்கு அவர் செய்வது தான் சரி என்பது போல செயல்படுகிறார். 14 மாவட்டங்களில் ஏறத்தாழ 69-லட்சம் குடும்பங்கள், ஒன்றரை கோடி பேர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை ,நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து இல்லை, உணவு இல்லை இதனால் நிவாரண முகாமுக்கு மக்கள் செல்ல தயாராக இல்லை.
முதலமைச்சரே தெரிவித்து இருக்கிறார்கள்
பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழையால் 2416 குடிசை வீடுகள், 720 வீடுகள் சேதம், 12 பேர் பலி, 963 கால்நடைகள் பலி, தண்ணீரில் 5.21 லட்சம் ஏக்கர் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மூழ்கி இருக்கின்றன, ஏறத்தாழ 9576 கிலோ மீட்டர் நீளம் சாலைகள் சேதமடைந்து இருக்கின்றன, 1847 சிறுபாலங்கள், 417 குளங்கள், 1649 கிலோ மீட்டர் மின் கடத்திகள், 23,664 மின் கம்பங்கள், 997 மின் மாற்றிகள், 1650 ஊராட்சி கட்டிடங்கள், 4650 அங்கன்வாடி மையங்கள், 205 சுகாதார நிலையங்கள், 5936 பள்ளிக்கட்டிங்கள், 381 சமுதாயக்கூடங்கள் 623 குடிநீர் வழங்கிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரே தெரிவித்து இருக்கிறார்கள்.
யாரிடம் யாசகம் கேட்கவில்லை.
சென்னையில் பெய்த 7 சென்டிமீட்டர் மழைக்கு நீங்கள் போட்டோக்கு போஸ் கொடுக்க பில்டப் காட்டினீர்கள், அதேநேரம் ஊத்தங்கரையில் அதிக அளவில் மழை பெய்து வாகனங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் சொல்ல நாதியில்லை, பல இடங்களில் உணவு இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.அரசின் கவனத்திற்கு நாங்கள் ஏற்கனவே பெற்ற அனுபவத்தில் இருந்து எடுத்து சொல்கிறோம், இன்னைக்கு நீங்கள் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செல்கிறீர்கள் இதே அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல் முதலில் சென்ற முதலமைச்சர் எடப்பாடியார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் பதவி என்பது பொதுவான பதவி, நாங்கள் யாரிடம் யாசகம் கேட்கவில்லை. ஆற்ற வேண்டிய கடமையை எடுத்து கூறுகிறோம் ஆனால் வரம்பு மீறி பேசுகிறீர்கள். ஆனால் காலத்தில் காணாமல் போய்விடும் எங்களால் வரம்பு மீறி பேச முடியும்.
மக்களை காட்ட வேண்டும்
இன்றைக்கு குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல காவல்துறை அலுவலகங்கள், மருத்துவமனை, ஏன் மாவட்ட ஆட்சி அலுவலகமே தண்ணீரில் மூழ்கி போய் உள்ளது. சென்னையில் 7 சென்டிமீட்டர் பெய்த மழையில் அதிமுக அலுவலத்தில் தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்று முதலமைச்சர் பதில் கூறுகிறார். ஆனால் மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கு மத்திய அரசிடம் 14 மாவட்டங்கள் பாதித்ததாக புள்ளி விவரத்தை கூறி உள்ளீர்கள். உங்கள் பணியை மக்கள் பார்க்கிறார்கள், எடப்பாடியார் ஆற்றும் பணியை மக்கள் பார்க்கிறார்கள் இனிமேல் வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு களத்தில் மக்கள் காக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுங்கள்” என கூறியுள்ளார்.