ராமேஸ்வரம் பிரசித்தி பெற்ற இரட்டை தாளை ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் பாலாலய பணிகளை விரைவு படுத்த கோரி வழக்கு. வழக்கில் வனத்துறை அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

பாலாலயம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை எவ்வித திருப்பணி வேலைகளும் நடைபெறவில்லை.
 
திருச்சி  ஸ்ரீரங்கம்  சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற கோபி ஆச்சார் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு, உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சேர்ந்த உப கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் இரட்டை தாளை ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 100 வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயிலில் கோயில் குடமுழுக்கு பணிக்காக கடந்த 2020 ம் ஆண்டு ஆக.30 ம் தேதியன்று பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. பாலாலயம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை எவ்வித திருப்பணி வேலைகளும் நடைபெறவில்லை.
 
வனத்துறை அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவு
 
 திருக்கோவில் குடமுழுக்கு சம்பந்தமாக 26.08.2020 அன்று, தலைமை ஆணையர் ஒப்புதல் கடித நகல்களில் பாலாலயம் செய்யப்பட்ட தேதியிலிருந்து (6 மாதத்திற்குள்) குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பணிகள் இதுவரை நடக்கவில்லை. இந்த திருக்கோயில் திருப்பணி வேலைகள்  விரைவாக நடத்திட கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பணிகள் துவங்கவில்லை. எனவே கோயிலின் திருப்பணிகள் துவக்கி விரைவில் குடமுழுக்கு நடத்த உத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கில் வனத்துறை அதிகாரிகளை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.