மேலும் அறிய
தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவி - எதில் தெரியுமா..?
தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு பாராட்டு
Source : whats app
தேசிய அளவில் வீர் கதா போட்டியில் வென்ற ராமநாதபுரம் அரசு பள்ளி மாணவி, புதுடெல்லியில் குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
வீர் கதா போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவி
ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி அ.பிருந்தா, வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வீர்கதா போட்டியை நடத்தி வருகின்றன. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்றையும், குடிமை உணர்வையும் அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.
ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார்
இந்தாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளிலிருந்து சுமார் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் அய்யாத்துரை என்பவர் மகள் அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க.வளர்மதியின் வழிகாட்டுதலில் 'ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.
இருவரில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி
மாணவி அ.பிருந்தா, ரூபாய் 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் கட்டுரைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா மட்டும்தான் அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மாணவி குளித்தலை பகுதி தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்தியாஸ்ரீ என்ற மாணவியாவார். அதே போல் மற்ற போட்டிகளில் வென்றுள்ள மாணவர்களில் பிருந்தா மட்டும் தான் அரசுப் பள்ளி மாணவி எனவும் சொல்லப்படுகிறது. மாணவி அ.பிருந்தா, வழிகாட்டிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் க.வளர்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, பள்ளித் தலைமையாசிரியர் ச.யுனைசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement





















